பொது செய்தி

தமிழ்நாடு

'க்ரீன் ட்ரீ கிரிக்கெட் அகாடமி' திறப்பு

Added : நவ 29, 2019
Share
Advertisement
சேலம்: சேலம், அயோத்தியாப்பட்டணம், 'தங்கம் மவுன்ட் லிட்ரா ஜீ' பள்ளி வளாகத்தில், 'க்ரீன் ட்ரீ கிரிக்கெட் அகாடமி' திறப்பு விழா, நேற்று முன்தினம் நடந்தது. அகாடமி இயக்குனர் அருண் தலைமை வகித்தார். அதில், தென் ஆப்பிரிக்கா முன்னாள் கிரிக்கெட் வீரர் ஜான்டி ரோட்ஸ் திறந்து வைத்து, அகாடமி வீரர், வீராங்கனைகளுக்கு ஆலோசனை வழங்கினர். அவருடன், தென்ஆப்பிரிக்காவின் மற்றொரு முன்னாள்

சேலம்: சேலம், அயோத்தியாப்பட்டணம், 'தங்கம் மவுன்ட் லிட்ரா ஜீ' பள்ளி வளாகத்தில், 'க்ரீன் ட்ரீ கிரிக்கெட் அகாடமி' திறப்பு விழா, நேற்று முன்தினம் நடந்தது. அகாடமி இயக்குனர் அருண் தலைமை வகித்தார். அதில், தென் ஆப்பிரிக்கா முன்னாள் கிரிக்கெட் வீரர் ஜான்டி ரோட்ஸ் திறந்து வைத்து, அகாடமி வீரர், வீராங்கனைகளுக்கு ஆலோசனை வழங்கினர். அவருடன், தென்ஆப்பிரிக்காவின் மற்றொரு முன்னாள் வீரான ரியான் மரோனும், ஆலோசனை வழங்கினார். இதுகுறித்து, அருண் கூறியதாவது: எங்கள் அகாடமியில், பி.சி.சி.ஐ., முதல்நிலை பயிற்சியாளர் சண்முகம், மூன்றாம் நிலை பயிற்சியாளர் சுரேஷ்குமார், தமிழக முன்னாள் கிரிக்கெட் வீரர் எர்னஸ்ட் ரவி ஆகியோரின் வழிகாட்டுதலில், மாணவர்களுக்கு தனித்தனியே பயிற்சியளிக்கப்படுகிறது. வளர்ந்து வரும் கிரிக்கெட் வீரர்களுக்கு, இது வரப்பிரசாதமாக அமையும். இவ்வாறு அவர் கூறினார். அகாடமி சார்பில், சேலம், எஸ்.ஆர்.பி., கிரிக்கெட் மைதானத்தில் நடந்த சிறப்பு பயிற்சி முகாமில், ஜான்டி ரோட்ஸ், ரியான் மரோன், பல்வேறு மாநிலங்களிலிருந்து பங்கேற்ற வீரர்களுக்கு பயிற்சியளித்தனர். இதன் நிறைவு விழாவில், சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. இதில், பள்ளி தலைவர் ஜெகதீசன், இயக்குனர் திருநாவுக்கரசு, முதல்வர் மாரியப்பன் உள்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X