பொது செய்தி

தமிழ்நாடு

ரூ.2.83 கோடியில் நலத்திட்ட உதவி: ஓமலூர் எம்.எல்.ஏ., வழங்கல்

Added : நவ 29, 2019
Advertisement

ஓமலூர்: காடையாம்பட்டி தாலுகா அலுவலகத்தில், அரசு நலத்திட்ட உதவி வழங்கும் விழா, நேற்று நடந்தது. தாசில்தார் மகேஸ்வரி தலைமை வகித்தார். அதில், ஓமலூர் எம்.எல்.ஏ., வெற்றிவேல், தன் தொகுதி நிதியிலிருந்து, மாற்றுத்திறனாளி ஐந்து பேருக்கு, பெட்ரோலில் இயங்கக்கூடிய மூன்று சக்கர வாகனம், அரசு சார்பில், 198 பேருக்கு மாத ஓய்வூதியம், 12 பேருக்கு இலவச வீட்டு மனை பட்டா என, மொத்தம், இரண்டு கோடியே, 73 லட்சத்து, 708 ரூபாய் மதிப்பில், நலத்திட்ட உதவி வழங்கினார். சமூக நலத்திட்ட தாசில்தார் லெனின், முன்னாள் எம்.எல்.ஏ., பல்பாக்கி கிருஷ்ணன் உள்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X