பொது செய்தி

தமிழ்நாடு

அதிகாரிகள் கவனத்திற்கு - சேலம்

Added : நவ 29, 2019
Advertisement

பராமரிப்பற்ற கலையரங்கம்: ஓமலூர், முத்துநாயக்கன்பட்டி மாரியம்மன் கோவில் எதிரே, ஊராட்சி சார்பில், கலையரங்கம் கட்டப்பட்டுள்ளது. அதில், கோவில் விழாவின்போது கலை நிகழ்ச்சி, பொது நிகழ்ச்சிகள் நடக்கின்றன. ஆனால், அதன் மேற்புறம் பராமரிப்பின்றி குப்பை தேங்கி துர்நாற்றம் வீசுகிறது. மழைக்காலங்களில் தண்ணீர் தேங்கி, செடிகள் முளைத்துள்ளன. இதனால், கட்டட உறுதித்தன்மை பாதிக்கும். அத்துடன், மழைநீரால் கொசுப்புழுக்கள் உருவாகும் அபாயம் உள்ளது.
கருவேல செடிகளால் இரவில் விபத்து: கே.கே.நகரிலிருந்து, கஞ்சமலையூர் வழியாக, இடங்கணசாலைக்கு, 6 அடி அகலத்தில் தார்ச்சாலை உள்ளது. அதில், 1 கி.மீ., தூரத்துக்கு, சாலை இருபுறமும் சீமைக்கருவேல செடிகள் முளைத்து, அதன் கிளைகள், சாலையில் நீண்டுள்ளன. இதனால், நான்கு சக்கர வாகனங்கள் செல்லும்போது, அதற்கு வழிவிட ஒதுங்க முடியாமல், இருசக்கர வாகன ஓட்டிகள் தடுமாறுகின்றனர். குறிப்பாக, இரவில் செல்வோர் விபத்தில் சிக்குவதால், கருவேல கிளைகளை அகற்றுவது அவசியம்.

பள்ளி கட்டடத்தால் காத்திருக்கு ஆபத்து: தலைவாசல், ராஜவீதி, ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில், 50க்கும் மேற்பட்டோர் படிக்கின்றனர். அங்குள்ள வளாகத்தில், பழைய கட்டடம் சேதமடைந்ததால், புது கட்டடத்தில் வகுப்புகள் செயல்படுகின்றன. இந்நிலையில், பழைய கட்டட மரத்தூண்கள் சேதமடைந்து, ஓடுகள் சரியும் அபாயத்தில் உள்ளது. மாணவர்கள், விபரீதத்தை உணராமல், அதன் அருகே விளையாடி வருகின்றனர். அசம்பாவிதம் ஏற்படும் முன், கட்டடத்தை அகற்ற வேண்டும்.

மேடு, பள்ளமான சாலையால் அவதி: சங்ககிரியிலிருந்து, ஓமலூர் செல்லும் பிரதான சாலையில், தினமும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. ஆனால், அய்யங்காட்டூர், மேம்பாலம் அருகே, மேடு, பள்ளமாக சாலை சீரழிந்துள்ளதால், வாகன ஓட்டிகள் தடுமாற்றம் அடைகின்றனர். சிலர், தவறி விழுந்து காயமடைவதோடு, மற்ற வாகன ஓட்டிகள் மீது மோதி விபத்துக்குள்ளாகின்றனர். அதனால், சாலையை சீரமைக்கக்கோரி, அதிகாரிகளிடம் பலமுறை அறிவுறுத்தியும், அவர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

பயன்பாடற்ற சிறுவர் பூங்கா: சங்ககிரி, ஆர்.எஸ்., நாகிசெட்டிப்பட்டி செல்லும் சாலையில், பேரூராட்சி சார்பில், சிறுவர் பூங்கா அமைக்கப்பட்டது. அங்கு, சறுக்கல், ஊஞ்சல், ராட்டினம் ஆகியவற்றில், குழந்தைகள் விளையாடியதோடு, முதியோர், பொழுதுபோக்க வசதியாக இருந்தது. ஆனால், சில ஆண்டாக, பூங்கா பராமரிப்பின்றி, விளையாட்டு உபகரணங்கள் துருப்பிடித்து வீணாகிவிட்டன. இதனால், யாரும் வராததால், பூங்கா பூட்டப்பட்டு பயன்பாடின்றி உள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X