பொது செய்தி

தமிழ்நாடு

ரூ.7,598 கோடி கடன் வழங்க இலக்கு: நபார்டு வங்கி திட்டம் வெளியீடு

Added : நவ 29, 2019
Advertisement

சேலம்: நபார்டு வங்கி, 2020 - 21ல், சேலம் மாவட்டத்தின் வளம் சார்ந்த வங்கி கடனாக, 7,598.87 கோடி ரூபாய் நிர்ணயித்துள்ளது.
நபார்டு வங்கி தயாரித்த, 2020 - 21ம் ஆண்டுக்கான வளம் சார்ந்த வங்கி கடன் திட்டத்தை, சேலம் கலெக்டர் ராமன், நேற்று வெளியிட்டார். அதில், நபார்டு வங்கி உதவி பொது மேலாளர் பாமா புவனேஸ்வரி பேசியதாவது: மாவட்டத்தின் முன்னோடி வங்கியான நபார்டு, ஆண்டுதோறும் வங்கிகளுக்கு, ஆண்டு கடன் திட்டத்தை தயாரித்து வெளியிடுகிறது. அதன்படி, 2020 - 21ம் ஆண்டுக்கு, 7,598.87 கோடி ரூபாய் அளவில், கடன் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. விவசாய வங்கி கடன், 5,847.79 கோடி ரூபாய் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில், குறுகிய கால விவசாய கடனாக, 3,496.31 கோடி ரூபாய், சிறு, குறு தொழில்களுக்கு, 913.33 கோடி ரூபாய் அடங்கும். விவசாயத்தில், மூலதனம் உருவாக்கும் விதமாக வங்கி கடன் அளிக்கப்பட வேண்டும். இதற்கு, அரசாங்கத்தின் மானியத்துடன் கூடிய கடன் திட்டங்களை, அமல்படுத்துவது அவசியம். விவசாய உற்பத்தியை அதிகரிக்க, உணவு பாதுகாப்பை வழங்க, விளைவிக்கப்படும் தானியங்களை சேமிப்பதற்கான தானிய கிடங்குகளை கட்டமைக்க என, நபார்டு வங்கியில் நிதி வாய்ப்புகள் உள்ளன. இவ்வாறு அவர் பேசினார்.

கலெக்டர் ராமன் பேசுகையில், ''விவசாய உற்பத்தியை அதிகரிக்க, வங்கிகள் நீண்டகால விவசாய கடன் வழங்க வேண்டும். விவசாயத்தில் இழப்புகளை ஈடுசெய்ய, வங்கிகள் கடன் பெறுகின்ற, கடன் பெறாத விவசாயிகளை, பயிர்கடன் திட்டத்தில் இணைக்க வேண்டும், சிறு, குறு விவசாயிகள், சிறு, குறு தொழில் முனைவோர், தாழ்த்தப்பட்டோர், மலைவாழ் மக்களுக்கு, வங்கிகள் கடன் வழங்க முன்னுரிமை அளிக்க வேண்டும்,'' என்றார். ரிசர்வ் வங்கி உதவி பொது மேலாளர் தாமோதரன், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் ஸ்ரீனிவாசன் உள்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X