ஆத்தூர்: ஆத்தூர் நூலகத்துக்கு, எம்.எல்.ஏ., நிதியில் தளவாட பொருட்கள் வழங்கப்பட்டன. ஆத்தூர் நூலக வளாகத்தில், தேசிய நூலக வார விழா, எம்.எல்.ஏ., தொகுதி மேம்பாட்டு நிதியில் தளவாட பொருட்கள் வழங்கும் விழா, நேற்று நடந்தது. மாவட்ட நூலக அலுவலர் கோகிலவாணி தலைமை வகித்தார். அதில், தளவாட பொருட்கள் வழங்கப்பட்டன. தொடர்ந்து, ஆத்தூர் வட்டார அரசு பள்ளி மாணவ, மாணவியருக்கு கட்டுரை போட்டி நடந்தது. அதில், முதல் மூன்று இடங்களை பிடித்தவர்களுக்கு முறையே, ஆங்கில அகராதி, பாரதியார் கவிதை புத்தகம், திருக்குறள் புத்தகம் வழங்கப்பட்டது. ஆத்தூர் எம்.எல்.ஏ., சின்னதம்பி, நூலக மேம்பாட்டு குழு தலைவர் மாதேஸ்வரன், நூலக அலுவலர்கள் பங்கேற்றனர்.