பொது செய்தி

தமிழ்நாடு

தேசிய பெல்ட் ரெஸ்லிங்: தமிழகத்துக்கு 24 பதக்கம்

Added : நவ 29, 2019
Advertisement

சேலம்: தேசிய பெல்ட் ரெஸ்லிங் போட்டியில், சேலம் மாணவர்கள் உள்பட, தமிழகத்தைச் சேர்ந்த, 24 பேர் பதக்கங்களை குவித்தனர். தெலுங்கானா மாநிலம், ஐதராபாதில், பள்ளி மாணவ, மாணவியருக்கு, தேசிய பெல்ட் ரெஸ்லிங் போட்டி, அண்மையில் நடந்தது. அதில், 55 வகை எடை பிரிவுகளில், மாணவர்கள் பங்கேற்றனர். கிட்ஸ் பிரிவில், சேலத்தைச் சேர்ந்த ஜெய்ஆகாஷ் இரண்டாமிடம், பள்ளி சிறார் பிரிவில் தமிழரசன் இரண்டாமிடம், கேடெட்ஸ் பிரிவில் நரேஷ் மூன்றாமிடம் பிடித்தனர். தமிழகத்திலிருந்து பங்கேற்றவர்களில், எட்டு பேர் முதலிடம், 10 பேர் இரண்டாமிடம், ஆறு பேர் மூன்றாமிடம் பிடித்தனர். அவர்களை, தமிழக டிரெடிசனல் ரெஸ்லிங் சங்க மாநில தலைவர் தத்தாத்ரி, செயலர் நடராஜ் உள்பட பலர் பாராட்டினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X