சம்பவம் செய்தி

தமிழ்நாடு

சிறுமியை சீரழித்த வழக்கு: துப்பு கிடைக்காமல் திணறும் போலீஸ்

Added : நவ 29, 2019
Share
Advertisement
ஓமலூர்: சிறுமி பாலியல் துன்புறுத்தல் வழக்கில், துப்பு கிடைக்காமல் போலீசார் திணறி வருகின்றனர்.ஓமலூர், தொளசம்பட்டி அருகே, கடந்த, 12 மாலை, இரண்டாம் வகுப்பு படிக்கும் மாணவி, பள்ளி முடிந்து, வீட்டுக்கு செல்ல, தனியாக காட்டு வழியில் நடந்து சென்றார். அப்போது, இரு வாலிபர்கள், அருகிலுள்ள புதருக்கு அழைத்துச்சென்று பாலியல் துன்புறுத்தல் கொடுத்தனர். இதுகுறித்து, 14ல், சிறுமியின் தாய்

ஓமலூர்: சிறுமி பாலியல் துன்புறுத்தல் வழக்கில், துப்பு கிடைக்காமல் போலீசார் திணறி வருகின்றனர்.
ஓமலூர், தொளசம்பட்டி அருகே, கடந்த, 12 மாலை, இரண்டாம் வகுப்பு படிக்கும் மாணவி, பள்ளி முடிந்து, வீட்டுக்கு செல்ல, தனியாக காட்டு வழியில் நடந்து சென்றார். அப்போது, இரு வாலிபர்கள், அருகிலுள்ள புதருக்கு அழைத்துச்சென்று பாலியல் துன்புறுத்தல் கொடுத்தனர். இதுகுறித்து, 14ல், சிறுமியின் தாய் புகார்படி, தொளசம்பட்டி போலீசார் விசாரித்தனர். ஓமலூர் மகளிர் போலீசாரும் இணைந்து விசாரித்தனர். குற்றவாளிகளை கைது செய்யாததால், விசாரணை அதிகாரியாக இருந்த, ஓமலூர் மகளிர் இன்ஸ்பெக்டர் ஜெயராணியை, சேலம் ஆயுதப்படை பணியிடை பயிற்சி பள்ளிக்கு மாற்றம் செய்து, புது விசாரணை அதிகாரியாக, மல்லூர் இன்ஸ்பெக்டர் அம்சவள்ளி நியமிக்கப்பட்டு, விசாரணை நடக்கிறது. சந்தேகத்தின்படி, பலரிடம் விசாரணை நடந்தும், இதுவரை துப்பு கூட கிடைக்கவில்லை. கடந்த வாரம், சிறுமியின் தாய், ஊரிலுள்ள பொது கிணற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்றார். அருகிலிருந்த மக்கள், அவரை மீட்டு காப்பாற்றிவிட்டனர். யாருடைய மிரட்டலுக்கு அச்சப்பட்டு, தற்கொலைக்கு முயன்றாரா, வேறு ஏதும் காரணமா என, போலீசார் விசாரிக்கின்றனர். போலீசார் கூறுகையில், 'சிறுமியிடமும், பெற்றோரிடமும் விசாரித்தபோது, முரண்பாடான தகவல் கிடைக்கிறது. இதனால், குற்றவாளிகள் குறித்து துப்பு கிடைக்கவில்லை. தொடர்ந்து விசாரணை நடக்கிறது' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X