காட்சிப்பொருளான தண்ணீர் தொட்டிகள்

Added : நவ 29, 2019
Advertisement

வீரபாண்டி: அரசு துவக்கப்பள்ளியை சுற்றி அமைக்கப்பட்ட தொட்டிகளில், தண்ணீர் நிரப்பப்படாமல் காட்சிப்பொருளாக இருப்பதால், மாணவர்கள், மக்கள் அவதிப்படுகின்றனர். ஆட்டையாம்பட்டி அருகே, எஸ்.பாப்பாரப்பட்டி ஊராட்சி, சாக்ரடீஸ் நகரில், அரசு தொடக்கப்பள்ளியை சுற்றியுள்ள ஆழ்துளை குழாய் அடிபம்புகளை அகற்றி, மின்மோட்டார் இணைப்பு கொடுத்து, அடிபம்பு இருந்த இடத்தில், தண்ணீர் தொட்டிகள் அமைக்கப்பட்டன. அதில், தண்ணீர் நிரப்பி, மாணவர்கள், மக்கள் பயன்படுத்தினர். ஆனால், மேட்டுக்கடை பகுதியில் அமைக்கப்பட்ட தண்ணீர் தொட்டியின் மின்மோட்டார் பழுதாகி, அப்படியே விட்டுவிட்டனர். அதேபோல், அந்த தொடக்கப்பள்ளியை சுற்றியுள்ள தண்ணீர் தொட்டிகளில், பல மாதமாக தண்ணீர் நிரப்புவதில்லை. காட்சிப்பொருளாக மாறிய தண்ணீர் தொட்டிகளால், அருகிலுள்ள பெண்கள், மற்ற பகுதிகளுக்கு சென்று, தண்ணீர் பிடித்து வருகின்றனர். மேலும், மதிய உணவு இடைவேளையில் சாப்பிட கை கழுவ தண்ணீரின்றி மாணவர்கள், அக்கம் பக்கத்திலுள்ள வீடுகளுக்கு செல்கின்றனர். அதனால், தொட்டிகளை மராமத்து செய்து, தண்ணீர் நிரப்பி பயன்பாட்டுக்கு கொண்டு வர, அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X