பள்ளி சமையலறை இடித்து தரைமட்டம்: குடிநீர் தொட்டியை கவனிக்காத அலட்சியம்

Added : நவ 29, 2019
Advertisement

வீரபாண்டி: பாதி இடிக்கப்பட்டு, ஆபத்தான நிலையில் தொங்கிக்கொண்டிருக்கும் தண்ணீர் தொட்டியால், மாணவர்களுக்கு ஆபத்து காத்திருக்கிறது.
ஆட்டையாம்பட்டி அருகே, எஸ்.பாப்பாரப்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில், 35 மாணவர்கள் படிக்கின்றனர். அவர்கள், 2010ல், சத்துணவுக்கு, சமையல் அறை கட்டப்பட்டுள்ளது. மூன்று மாதத்துக்கு முன், மேற்கூரை முழுவதும் பெயர்ந்து விழுந்தது. இதனால், அதை பயன்படுத்தாமல் பூட்டி, வகுப்பறையில், சமையல் செய்யப்பட்டது. இதுகுறித்து, இரு மாதத்துக்கு முன், 'காலைக்கதிர்' நாளிதழில் செய்தி வெளியானதால், அதிகாரிகள், சமையலறையை இடித்துவிட்டு, புது சமையலறை கட்டப்படும் என தெரிவித்தனர். நேற்று முன்தினம், அந்த அறையை முழுவதுமாக இடித்து தரைமட்டமாக்கினர். ஆனால், அதன் அருகே, இரு ஆண்டுக்கு மேலாக, பாதி இடிக்கப்பட்டு, ஆபத்தான நிலையில் தொங்கிக்கொண்டிருக்கும் தண்ணீர் தொட்டியை இடிக்காமல் விட்டுள்ளனர். இதனால், மதிய உணவு இடைவேளையில், மாணவர்கள், சமையலறை அருகே விளையாடும்போது, அந்தரத்தில் தொங்கிக்கொண்டிருக்கும் விரிசல் விழுந்த தொட்டி விழுந்து, விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. அதனால், புதிதாக சமையலறை கட்டும் முன், தண்ணீர் தொட்டியை முழுவதுமாக இடித்து அகற்ற, அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X