பொது செய்தி

தமிழ்நாடு

விதிகளை மீறிய காப்பக பெண்கள்: சமூக நலத்துறை அனுமதி மறுப்பு

Added : நவ 29, 2019
Advertisement

திருச்சி: திருச்சியில், விதிமுறைகளை மீறி வெளியூர் சென்று திரும்பிய பெண்களை, சமூக நலத்துறை அலுவலர்கள், காப்பகத்தில் அனுமதிக்க மறுத்து விட்டனர்.
திருச்சி, சுப்பிரமணியபுரத்தில், கிடியோன் ஜேக்கப் என்பவர் நடத்தி வந்த குழந்தைகள் காப்பகத்தில் முறைகேடு நடப்பதாக, 2011ல், உயர் நீதிமன்றத்தில், பொது நல வழக்கு தொடரப்பட்டது. நீதிமன்ற உத்தரவுப்படி, மாவட்ட நீதிபதி தலைமையில் விசாரணை நடத்தப்பட்டது. இதில், பெண் குழந்தைகளுக்கான பிறப்பு சான்று உள்ளிட்ட ஆவணங்கள், முறையாக பராமரிக்கப்படாதது தெரிந்தது. இதையடுத்து, 2016ம் ஆண்டு, காப்பகம், மாவட்ட சமூக நலத்துறை கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டது. தொடர்ந்து, காப்பகத்தில் தங்க வைக்கப்பட்டிருந்த சில பெண் குழந்தைகளின் பெற்றோர் அடையாளம் காணப்பட்டு, அவர்களுடன் அனுப்பி வைக்கப்பட்டனர். பெற்றோர் அடையாளம் காணப்படாமலும், பெற்றோருடன் செல்ல விரும்பாமலும், 83 பெண்கள் காப்பகத்திலேயே தங்கியுள்ளனர். இதில், ஒன்பது பெண்கள், விதிகளை மீறி, காப்பகத்தில் இருந்து வெளியேறி, தீபாவளி பண்டிகைக்கு ஆடை மற்றும் அலங்கார பொருட்கள் வாங்குவதற்காக, அக்டோபர், 18ல் சென்னைக்கு சென்று, 21ம் தேதி, மீண்டும் காப்பகத்துக்கு திரும்பியுள்ளனர். இதனால், அவர்கள், காப்பகத்தில் தொடர்ந்து தங்கியிருக்க, சமூக நலத்துறை அலுவலர்கள் அனுமதி மறுத்து விட்டனர். மேலும், நீதிமன்ற விதிமுறைகளை மீறியதால், அவர்களை வேறு காப்பகத்துக்கு மாற்றுவதாக அறிவித்து, காப்பகத்தில் நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளது. இது தொடர்பாக, நேற்று, திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் நிஷா, மாவட்ட சமூக நலத்துறை அலுவலர் தமீம் முனிஷா ஆகியோர், காப்பகத்தில் விசாரணை நடத்தினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X