பொது செய்தி

தமிழ்நாடு

திருப்பத்தூர் மக்களின் நீண்டகால கனவு

Added : நவ 29, 2019
Advertisement

திருப்பத்தூர்: ஆங்கிலேயர் ஆட்சியில், 1790ல் திருப்பத்தூர் மாவட்டம் உருவாக்கப்பட்டு, அதன் முதல் கலெக்டராக கிண்டர்ஸ்லே நியமிக்கப்பட்டார். அவர், 1792 ஏப்., 4ல் வரை அப்பொறுப்பில் இருந்தார். பின்னர், சேலம் மாவட்டம் உருவாக்கப்பட்டு, அதன் தலைநகரமாக திருப்பத்தூர் இருந்தது. அப்போதுள்ள ரயில்வே ஸ்டேஷனில், கலெக்டர் அலுவலகம் இருந்தது. இந்திய சுதந்திரத்திற்கு பின், வட ஆற்காடு மாவட்டத்துடன், திருப்பத்தூர் இணைக்கப்பட்டது. ஆங்கிலேயர் காலத்தில், தனி மாவட்டமாக இருந்த திருப்பத்தூர், மீண்டும் புதிய மாவட்டமாக வந்துள்ளது. இதனால், திருப்பத்தூர் மக்களின் நீண்டகால கனவு நிறைவேறியுள்ளது. அதே சமயம், இந்தியாவின் ஏற்றுதியில் முக்கிய பங்கு வகிக்கும் தோல் தொழிற்சாலைகள் இம்மாவட்டத்தில் வாணியம்பாடி, ஆம்பூரில் உள்ளது தனி சிறப்பு. இங்கு, தோல் மற்றும் தோல் பொருட்கள் உற்பத்தி செய்யப்பட்டு, ஆண்டுக்கு, 30 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்கள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இதனால், மூன்று லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைத்துள்ளது. மேலும், சுற்றுலா தலமான ஏலகிரிமலை இம்மாவட்டத்தில் உள்ளது தனி சிறப்பாகும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X