சம்பவம் செய்தி

தமிழ்நாடு

தனியார் நிறுவன பஸ் ஏரியில் கவிழ்ந்து விபத்து

Added : நவ 29, 2019
Share
Advertisement
வந்தவாசி: சென்னை, ஒரகடத்தில் உள்ள தனியார் நிறுவனத்துக்கு சொந்தமான பஸ், திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த எரும்பூர் கிராமத்தில் இருந்து, நேற்று காலை, 6:00 மணிக்கு பெண் தொழிலாளர்களை ஏற்றிகொண்டு நிறுவனத்துக்கு சென்றது. மும்முனி கிராமத்தை சேர்ந்த ராஜேந்திரன், 47, பஸ்சை ஓட்டினார். இதில், 25 தொழிலாளர்கள் சென்றனர். வந்தவாசி - காஞ்சிபுரம் சாலையில், வந்தவாசி ஏரிக்கரை அருகே

வந்தவாசி: சென்னை, ஒரகடத்தில் உள்ள தனியார் நிறுவனத்துக்கு சொந்தமான பஸ், திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த எரும்பூர் கிராமத்தில் இருந்து, நேற்று காலை, 6:00 மணிக்கு பெண் தொழிலாளர்களை ஏற்றிகொண்டு நிறுவனத்துக்கு சென்றது. மும்முனி கிராமத்தை சேர்ந்த ராஜேந்திரன், 47, பஸ்சை ஓட்டினார். இதில், 25 தொழிலாளர்கள் சென்றனர். வந்தவாசி - காஞ்சிபுரம் சாலையில், வந்தவாசி ஏரிக்கரை அருகே சென்றபோது, எதிரே வந்த வாகனத்திற்கு வழிவிட ராஜேந்திரன் பஸ்சை இடதுபுறமாக திருப்பினார். அப்போது, கட்டுப்பாட்டை இழந்த பஸ் சாலையோரத்தில் உள்ள இரண்டு எல்லைக்கற்கள் மீது மோதி ஏரியில் இறங்கியது. இதில் தொழிலாளர்கள் அலறியடித்தபடி, பின்பக்கமாக உள்ள அவசர கதவு வழியாக வெளியேறினார். இதில், அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை. வந்தவாசி வடக்கு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X