சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பள்ளி மாணவி பலாத்காரம்: நைஜீரியாவை சேர்ந்தவர் கைது

Added : நவ 29, 2019
Share
Advertisement
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருகே, மாணவி பலாத்கார வழக்கில், நைஜீரியாவை சேர்ந்தவர் கைது செய்யப்பட்டார். பெங்களூரை சேர்ந்த, 16 வயது பள்ளி மாணவி, திருவண்ணாமலை அடுத்த சு.கீழ்நாச்சிப்பட்டில் பாட்டி வீட்டில் தங்கி, பிளஸ் 1 படித்து வந்தார். அதே ஊரை சேர்ந்த செல்லதுரை, 20, திருமணம் செய்து கொள்வதாக கூறி, பலாத்காரம் செய்து தலைமறைவாகி விட்டார். கடந்த செப்., 21ல், திருவண்ணாமலையை சேர்ந்த

திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருகே, மாணவி பலாத்கார வழக்கில், நைஜீரியாவை சேர்ந்தவர் கைது செய்யப்பட்டார். பெங்களூரை சேர்ந்த, 16 வயது பள்ளி மாணவி, திருவண்ணாமலை அடுத்த சு.கீழ்நாச்சிப்பட்டில் பாட்டி வீட்டில் தங்கி, பிளஸ் 1 படித்து வந்தார். அதே ஊரை சேர்ந்த செல்லதுரை, 20, திருமணம் செய்து கொள்வதாக கூறி, பலாத்காரம் செய்து தலைமறைவாகி விட்டார். கடந்த செப்., 21ல், திருவண்ணாமலையை சேர்ந்த பவுல், 43, கண்பார்வையற்ற நைஜீரியா நாட்டை சேர்ந்த நிக்கிபிலிப், 34, ஆகியோர், மாணவி மற்றும் அவரது பாட்டியை சந்தித்து, மாணவியை நைஜீரியாவுக்கு அழைத்து செல்வதாக கூறி, நிக்கிபிலிப், மாணவியை பலாத்காரம் செய்தார். தகவலறிந்த, 'சைல்டு லைன்' அமைப்பினர், அக்., 26ல், மாணவியை மீட்டு, அரசு காப்பகத்தில் சேர்த்தனர். திருவண்ணாமலை அனைத்து மகளிர் போலீசார் விசாரித்து, செல்லதுரையை கைது செய்தனர். தலைமறைவாக இருந்த சிறுமியின் பாட்டி, பவல், மற்றும் நைஜீரியாவை சேர்ந்த நிக்கிபிலிப்பை தேடி வந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு, நிக்கிபிலிப்பை போலீசார் கைது செய்தனர். தலைமறைவாக உள்ள மற்ற இருவரை தேடி வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X