நாடக, நாட்டுப்புற கலைஞர்கள் நலசங்க ஆலோசனை கூட்டம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

நாடக, நாட்டுப்புற கலைஞர்கள் நலசங்க ஆலோசனை கூட்டம்

Added : நவ 29, 2019

பாலக்கோடு: தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு திரவுபதியம்மன் கோவில் வளாகத்தில், தமிழ்நாடு நாடக மற்றும் நாட்டுப்புற கலைஞர்கள் நலசங்கம் சார்பில், ஆலோசனை கூட்டம் நடந்தது. மாநில துணை தலைவர் சின்னசாமி தலைமை வகித்தார். கூட்டத்தில், அனைத்து நாடக மற்றும் நாட்டுப்புற கலைஞர்களுக்கும், அடையாள அட்டை மற்றும் அரசு நிதியுதவி வழங்க வேண்டும். மேலும், வீடு மற்றும் நிலம் இல்லாதவர்களுக்கு, தமிழக அரசின் சார்பில் இலவச வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும். 45 வயதுக்கு மேற்பட்ட கலைஞர்களுக்கு ஓய்வூதியம் வழங்க வேண்டும். தற்போது வழங்கக்கூடிய, 2,000 ரூபாய் ஓய்வூதியத்தை, 5,000 ரூபாயாக உயர்த்தி வழங்க வேண்டும். இக்கலைஞர்களுக்கு இலவச பஸ் பாஸ் வழங்குவதுடன், இவர்களை, நடிகர் சங்கத்திலும் இணைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாநில கவுரவ ஆலோசகர் சிங்காரவேலன், மாநில அமைப்பு செயலாளர் சாரதி, மாநில துணை அமைப்பாளர் செந்தில் உள்பட, 100க்கும் மேற்பட்ட கலைஞர்கள், கலந்து கொண்டனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X