பொது செய்தி

தமிழ்நாடு

அடிப்படை வசதிகள் கேட்டு கிராம மக்கள் நாற்று நட்டு போராட்டம்

Added : நவ 29, 2019
Advertisement

தர்மபுரி: தர்மபுரி அடுத்த அன்னை சத்யா நகரில், அடிப்படை வசதிகள் கேட்டு, இப்பகுதி பொதுமக்கள் நாற்று நடும் போராட்டத்தில் நேற்று ஈடுபட்டனர். தர்மபுரி அடுத்த, சோகத்தூர் பஞ்.,க்கு உட்பட்ட அன்னை சத்யா நகரில், 300க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இங்குள்ள, மூன்றாவது வீதியில் போதிய அடிப்படை வசதிகளான, சாலை, சாக்கடை கால்வாய், மின்விளக்கு மற்றும் குடிநீர் வசதிகள் ஏதும் இல்லை. இதனால் இப்பகுதி மக்கள் கடும் அவதிப்பட்டு வந்தனர். இதுகுறித்து, பஞ்., மற்றும் மாவட்ட நிர்வாகத்துக்கு பலமுறை கோரிக்கை விடுத்தும், நடவடிக்கை இல்லை. இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு பெய்த மழையால், இந்த வீதிமுழுவதும், சேறும், சகதியுமாக மாறியது. மேலும், நேற்று காலை நேரத்தில் பள்ளி, கல்லூரிக்கு செல்லும் மாணவர்கள் மற்றும் பொதுமக்கள், கடும் அவதிப்பட்டனர். பின், காலை, 11:00 மணிக்கு இப்பகுதியில் திரண்ட பெண்கள், திடீரென அப்பகுதியில் இருந்த சேற்றில் நாற்று நட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X