பொது செய்தி

தமிழ்நாடு

விட்டு, விட்டு பெய்யும் மழை: தொழிலாளர்கள் அவஸ்தை

Added : நவ 29, 2019
Advertisement

தர்மபுரி: விட்டு, விட்டு பெய்யும் மழையால் தொழிலாளர்கள் அவதிப்பட்டு வருகின்றனர். தர்மபுரி உட்பட, மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த, இரு தினங்களாக பகல் நேரங்களில் விட்டு, விட்டு மழை பெய்து வருகிறது. இதனால், பள்ளி குழந்தைகள் மட்டுமின்றி, பெற்றோரும் அவதிப்பட்டு வருகின்றனர். தொழிலாளர்கள் தங்களது பணியை முழுமையாக செய்யமுடியாமல் அவஸ்தை அடைந்து வருகின்றனர். மழை, இரு தினங்களுக்கு தொடர வாய்ப்புள்ளதாக, வானிலை மையம் அறிவித்துள்ளதால், கட்டுமானம், விவசாயம் உள்ளிட்ட பணிகளில் ஈடுபடும் பலர் பணிகளை நிறுத்தி வைக்க முடிவு செய்துள்ளனர். மாவட்டத்தில் நேற்று காலை, 8:00 மணி நிலவரப்படி அதிகபட்சமாக பாப்பிரெட்டிப்பட்டியில், 11 மி.மீ., தர்மபுரி, 10, அரூர், 3 என, மொத்தம், 24 மி.மீ., மழையளவு பதிவானது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X