கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட, த.மா.கா., சார்பில், உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட நேற்று விருப்ப மனு பெறப்பட்டது. மாவட்ட தலைவர் ஜெயபிரகாஷ் விருப்ப மனுக்களை பெற்றுக் கொண்டார். நேற்று, 50க்கும் மேற்பட்டவர்கள் விருப்ப மனுக்களை வழங்கினர். நகராட்சி உறுப்பினருக்கு, ஆயிரம் ரூபாய் கட்டணமாகவும், பேரூராட்சி உறுப்பினருக்கு, 500 ரூபாய், மாவட்ட பஞ்சாயத்து உறுப்பினருக்கு, 2,000 ரூபாய், ஊராட்சி ஒன்றிய உறுப்பினருக்கு, 1,000 ரூபாயும் கட்டணமாக பெறப்பட்டது.
Advertisement