பொது செய்தி

தமிழ்நாடு

அரசு அருங்காட்சியகத்தில் 3 நாள் தொல்லெழுத்து பயிலரங்கம்

Added : நவ 29, 2019
Advertisement

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி, அரசு அருங்காட்சியகத்தில், சேலம், நங்கவள்ளி கைலாஷ் மகளிர் கல்லூரி மற்றும் ஏ.வி.எஸ்., கலை மற்றும் அறிவியல் கல்லூரி பேராசிரியர்களுக்கு மூன்று நாள் தொல்லெழுத்து பயிலரங்கம் நடந்தது. முதல் நாளில், அருங்காட்சியக காப்பாட்சியர் கோவிந்தராஜ், இந்தியாவின் வரலாற்றுக்கு முற்பட்ட காலம், தமிழ் எழுத்துக்கள் தோன்றிய காலம், அதன் வடிவம் ஆகியவை குறித்து எடுத்துரைத்தார். பின்னர், பிராமி என்னும், 2,000 ஆண்டுகளுக்கு முற்பட்ட தமிழ் எழுத்துக்களை எழுத பயிற்சி அளித்தார். இரண்டாம் நாளில், கடந்த 2,000 ஆண்டுகளாக தமிழ் எழுத்துக்கள் எவ்வாறு மாற்றமடைந்து, தற்போதைய நிலையை அடைந்தது என விளக்கினார். பிறகு தமிழக கோவில் கட்டடக்கலை மற்றும் சிற்பக்கலையை எவ்வாறு அடையாளம் காண்பது என்பது குறித்து விளக்கம் அளித்தார். மூன்றாவது நாளான நேற்று, கல்வெட்டுகளை படியெடுப்பது குறித்து அருங்காட்சியக காப்பாட்சியர் கோவிந்தராஜ் செய்முறை பயிற்சி அளித்தார். இதில் பேராசிரியர்கள் தாமே படியெடுத்து, அதில் உள்ள எழுத்துக்களை படிக்க கற்றுக்கொண்டனர். இப்பயிற்சியை, அருங்காட்சியக பணியாளர் செல்வகுமார் ஒருங்கிணைத்தார். பயிற்சி பெற்ற பேராசிரியர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X