பொது செய்தி

தமிழ்நாடு

விபத்து இழப்பீடு வழங்காத இரண்டு அரசு பஸ்கள் ஜப்தி

Added : நவ 29, 2019
Advertisement

கிருஷ்ணகிரி: விபத்தில் பலியானவர்களுக்கு, இழப்பீடு வழங்காததால், நீதிமன்ற ஊழியர்கள் இரண்டு அரசு பஸ்சை ஜப்தி செய்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரையை அடுத்த அத்திபாடியை சேர்ந்த கோவிந்தன் மகன் சகசுராமன், 10. இவர், கடந்த ஆண்டு மார்ச் மாதம் நடந்த சாலை விபத்தில், அரசு பஸ் மோதி பலியானார். உரிய இழப்பீடு கோரி, ஊத்தங்கரை சார்பு நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வந்தது. இதில், இறந்த சகசுராமன் குடும்பத்திற்கு, 5.60 லட்சம் ரூபாய் இழப்பீடாக வழங்க, நீதிமன்றம் உத்தரவிட்டது. அரசு போக்குவரத்து கழகம் இழப்பீட்டுத்தொகை வழங்கவில்லை. இதனால், சேலம் கோட்ட அரசு பஸ்சை ஜப்தி செய்ய, நீதிமன்றம் உத்தரவிட்டது. இதேபோல், ஊத்தங்கரை அடுத்த மிட்டப்பள்ளியை சேர்ந்த ராமலு மகன் சம்பத்குமார், 42. இவர், கடந்த, 2017ல் நடந்த சாலை விபத்தில், அரசு பஸ் மோதி பலியானார். இந்த வழக்கை விசாரித்த, ஊத்தங்கரை சார்பு நீதிமன்றம், பலியான சம்பத்குமாரின் குடும்பத்திற்கு, ஏழு லட்சத்து, 21 ஆயிரத்து, 118 ரூபாயை இழப்பீட்டுத்தொகை வழங்க உத்தரவிட்டது. இழப்பீடு வழங்காததால், சேலம் கோட்ட அரசு பஸ்சை ஜப்தி செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து, நேற்று ஊத்தங்கரை பஸ் ஸ்டாண்டில், பெங்களூரு மற்றும் திருப்பத்தூர் செல்லும் இரண்டு அரசு பஸ்சை நீதிமன்ற ஊழியர்கள் ஜப்தி செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X