சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பெண் தற்கொலையில் இரண்டு பேர் கைது

Added : நவ 29, 2019
Advertisement

ஓசூர்: தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட பெண்ணின் உடலை, சாலையோரம் வீசிய கள்ளக்காதலன் உட்பட இரண்டு பேரை போலீசார் கைது செய்தனர்.
தேன்கனிக்கோட்டை தாலுகா பூதுகோட்டை என்ற இடத்தில் கடந்த, 19ல், ஒரு பெண் இறந்து கிடந்தார். போலீசார் விசாரணையில், இறந்து கிடந்த பெண் பேவநத்தத்தை சேர்ந்த ராதா, 35, என்பதும், கணவனால் கைவிடப்பட்டவர் என்பதும் தெரிந்தது. இறந்த ராதா, அய்யன்புரம் தொட்டியை சேர்ந்த பசவராஜ் என்பவருக்கு, ஐந்து லட்சம் ரூபாய் கடன் கொடுத்துள்ளார். அதை வசூல் செய்ய பசவராஜை அடிக்கடி சந்தித்து வந்தார். இதனால், இருவருக்கும் கள்ளத்தொடர்பு ஏற்பட்டது. பசவராஜிக்கு ஏற்கனவே திருமணம் ஆகி, குழந்தைகள் உள்ளன. பசவராஜிடம், அவரது மனைவி, குழந்தைகளை பார்க்க செல்லக்கூடாது, அப்படிச் சென்றால், தர வேண்டிய பணத்தை கொடு, இல்லாவிட்டால் தற்கொலை செய்வேன் என ராதா மிரட்டியுள்ளார். இதனால் இருவருக்கும் தகராறு ஏற்பட்டதால் பசவராஜ், ராதாவை விட்டு விலகினார். இதனால், ராதா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். ராதாவில் வீட்டிற்கு மஞ்சுநாத், 24, என்பவருடன் வந்த பசவராஜ், ராதாவின் கை, கால்களை கட்டி சாலையோரம் வீசிவிட்டுச் சென்றது தெரியவந்தது. இதையடுத்து, பசவராஜ், மஞ்சுநாத் ஆகியோரை தேன்கனிக்கோட்டை இன்ஸ்பெக்டர் சரவணன், கைது செய்து, கோர்ட்டில் ஆஜர்படுத்தி, சேலம் மத்திய சிறையில் அடைத்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X