சம்பவம் செய்தி

தமிழ்நாடு

தகராறில் மனைவியின் கழுத்தை அறுத்த கணவன்

Added : நவ 29, 2019
Share
Advertisement
ஓசூர்: ஓசூர், அத்திப்பள்ளி அருகே உள்ள எடவனஹள்ளியை சேர்ந்தவர் மல்லேசப்பா. இவரது மனைவி சவுமியா, 22. மல்லேசப்பா எந்த வேலைக்கும் போகாமல் இருந்துள்ளார். சவுமியா, அத்திப்பள்ளி பகுதியில் உள்ள கார்மெண்ட்ஸ் நிறுவனத்தில் பணி புரிந்து வருகிறார். நேற்று முன்தினம் கணவன் - மனைவி இருவரும் குல்பர்காவிற்கு செல்ல, ஓசூர் ரயில் நிலையத்திற்கு வந்தனர். அப்போது இருவருக்கும் தகராறு

ஓசூர்: ஓசூர், அத்திப்பள்ளி அருகே உள்ள எடவனஹள்ளியை சேர்ந்தவர் மல்லேசப்பா. இவரது மனைவி சவுமியா, 22. மல்லேசப்பா எந்த வேலைக்கும் போகாமல் இருந்துள்ளார். சவுமியா, அத்திப்பள்ளி பகுதியில் உள்ள கார்மெண்ட்ஸ் நிறுவனத்தில் பணி புரிந்து வருகிறார். நேற்று முன்தினம் கணவன் - மனைவி இருவரும் குல்பர்காவிற்கு செல்ல, ஓசூர் ரயில் நிலையத்திற்கு வந்தனர். அப்போது இருவருக்கும் தகராறு ஏற்பட்டது. இதில், குடிபோதையில் இருந்த மல்லேசப்பா, சவுமியாவை தாக்கி, அவரது கழுத்தை ஆக்சா பிளேடால் அறுத்தார். இதில் சவுமியாவிற்கு கழுத்தில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்தம் கொட்டியது. ரயில்வே போலீசார் அங்கு வந்து, சவுமியாவை ஓசூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மனைவியின் கழுத்தை அறுத்த மல்லேசப்பாவை, ரயில்வே போலீசார் பிடித்து, ஓசூர் டவுன் போலீசில் ஒப்படைத்தனர். இது குறித்து டவுன் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X