பொது செய்தி

தமிழ்நாடு

புகார் பெட்டி - கரூர்

Added : நவ 29, 2019
Advertisement

தோகைமலையில் சுகாதார சீர்கேடு: குளித்தலை அடுத்த, தோகைமலை கடைவீதி, வேதாசல புரம், பஸ் ஸ்டாண்ட், அக்ரஹாரம் தெரு, அரசு மாணவர்கள் விடுதி பகுதியில் கழிவுநீர் வடிகால் உள்ளது. இதில் கழிவுநீர் வெளியேற வழியின்றி தேங்கியுள்ளது. கடும் துர்நாற்றம் வீசுகிறது. பல்வேறு தொற்று நோய் பரவும் வாய்ப்பும் உள்ளது. மின் விளக்கு அமைத்தல், குப்பையை அகற்றி, நோய் தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட வேண்டியது அவசியம்.

- எ.காதர்மொய்தீன், தோகைமலை.

விடுதி, விளையாட்டு மைதானம் தேவை: குளித்தலை அடுத்த, சத்தியமங்கலம் பஞ்., அய்யர்மலையில் அரசு கலைக்கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரியில் இளங்கலை, முதுகலை மற்றும் முனைவர் பட்ட வகுப்புகள் நடத்தப்படுகின்றன. 1,700 க்கு மேற்பட்ட மாணவ, மாணவியர் படிக்கின்றனர். மாணவியர் நலன் கருதி விடுதி மற்றும் விளையாட்டு மைதானம் அமைக்க, மாவட்ட நிர்வாகம் சார்பில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

- கே.ராஜசேகரன், குளித்தலை.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X