பொது செய்தி

தமிழ்நாடு

தச்சுத் தொழிலாளர் சங்க ஆலோசனை கூட்டம்

Added : நவ 29, 2019
Advertisement

கரூர்: கரூரில், தமிழ்நாடு தச்சுத் தொழிலாளர் சங்கத்தின் புதிய மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் நாகராஜன் தலைமை வகித்தார். வெளிமாநில தொழிலாளர்களின் வருகை தமிழகத்தில் அதிகரித்துள்ளது. இதனால், தமிழக தச்சு தொழிலாளர்கள் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதை தடுக்க, அரசு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். தச்சு தொழிலாளர்களுக்கு, தொழில் உபகரண கருவிகளை மானிய விலையில் அரசு வழங்க வேண்டும். தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் மூலம், தொழில் கடன் வழங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பன உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில், மாவட்ட செயலாளர் சரவணன், தமிழ்நாடு தச்சுத் தொழிலாளர் சங்க மாநில பொதுச்செயலாளர் பாலு, மாவட்ட பொருளாளர் ராஜமாணிக்கம், துணைத்தலைவர் அங்கமுத்து, துணை செயலாளர் செல்வராஜ் உட்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X