பொது செய்தி

தமிழ்நாடு

மூன்றாம் பாலினத்தவர்களுக்கு சுயதொழில் தொடங்க மானியம்

Added : நவ 29, 2019
Share
Advertisement
கரூர்: மூன்றாம் பாலினத்தவர்களுக்கு, சுயதொழில் தொடங்க மானியம் வழங்கப்பட உள்ளது என, கலெக்டர் அன்பழகன் தெரிவித்துள்ளார்.இது குறித்து, அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் நலவாரியம் மூலம், மூன்றாம் பாலித்தனவருக்கு சுயமாக தொழில் தொடங்க, தொழிலுக்கு ஏற்றவாறு மானியம் வழங்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது. சொந்தமாக தொழில் செய்ய விரும்புவோர் தொழில்

கரூர்: மூன்றாம் பாலினத்தவர்களுக்கு, சுயதொழில் தொடங்க மானியம் வழங்கப்பட உள்ளது என, கலெக்டர் அன்பழகன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து, அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் நலவாரியம் மூலம், மூன்றாம் பாலித்தனவருக்கு சுயமாக தொழில் தொடங்க, தொழிலுக்கு ஏற்றவாறு மானியம் வழங்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது. சொந்தமாக தொழில் செய்ய விரும்புவோர் தொழில் அனுபவம் குறித்த விபரம், அடையாள அட்டை மற்றும் ஆதார் அட்டை கட்டாயமாக வைத்திருக்க வேண்டும். சுயதொழில் செய்ய விரும்பும் தொழில் குறித்த பயிற்சி பெற்றிருப்பின், அதற்குரிய சான்று, சம்பந்தப்பட்ட தொழில் குறித்தான அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும். ஓராண்டுவரை தொழில் வளர்ச்சி மற்றும் முன்னேற்ற அறிக்கையை, சரியான பயனீட்டு சான்றிதழை, மாவட்ட சமூகநல அலுவலரிடம் சமர்ப்பிக்க வேண்டும். ஏற்கனவே விண்ணப்பித்து பயனடைந்தவர்கள், மீண்டும் விண்ணப்பிக்க அனுமதியில்லை. இதுதொடர்பான விபரங்களுக்கு, மாவட்ட சமூகநல அலுவலகம், கலெக்டர் அலுவலகம், கரூர் என்ற முகவரியில் நேரில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X