பொது செய்தி

தமிழ்நாடு

அதிகாரிகள் கவனத்திற்கு - கரூர்

Added : நவ 29, 2019
Advertisement

கிளை வாய்க்காலில் செடிகள் ஆக்கிரமிப்பு: கிருஷ்ணராயபுரம் அடுத்த, சிந்தலவாடி நெடுஞ்சாலை வழியாக சிறிய கிளை பாசன வாய்க்கால் செல்கிறது. இதன் மூலம், வாழை, வெற்றிலை, நெல் ஆகிய பயிர்களை விவசாயிகள் சாகுபடி செய்துள்ளனர். இந்த வாய்க்காலில் தண்ணீர் வரும் வழியில் அதிகமான நாணல் செடிகள் வளர்ந்து வருகிறது. இதனால் தண்ணீர் செல்வதில் தடை ஏற்படுகிறது. அவற்றை வெட்டி அகற்றுவதற்கான நடவடிக்கையை பஞ்., நிர்வாகம் எடுக்க வேண்டுமென, மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பழமையான கட்டடம் அகற்ற வேண்டும்: கிருஷ்ணராயபுரம் அடுத்த, லாலாப்பேட்டை கொடிக்கால் தெரு ஆர்.ஐ., அலுவலகம் அருகில் பழமையான அரசு கட்டடம், பயன்படாமல் உள்ளது. பல பகுதிகள் சேதமடைந்துள்ளன. இங்கு கொசு உற்பத்தியாகிறது. இதனால், அருகில் உள்ள குடியிருப்பு மக்கள் அவதிப்படுகின்றனர். அருகில் அரசு பள்ளி குழந்தைகள் இந்த பகுதியில் நடந்து செல்கின்றனர். இந்த கட்டடத்தை அகற்றிவிட்டு புதிய கட்டடம் கட்ட, பஞ்சாயத்து நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

குப்பை குவிப்பு; பாசனநீர் தேக்கம்: கிருஷ்ணராயபுரம் அடுத்த, தீர்த்தபாளையம் அரசு நடுநிலைப்பள்ளி அருகில் பாசன வாய்க்கால் செல்கிறது. இந்த வாய்க்கால் மூலம், 50 ஏக்கர் விவசாய நிலங்களுக்கு தண்ணீர் செல்கிறது. தற்போது, இந்த வாய்க்காலில் குப்பை குவிக்கப்பட்டு தண்ணீர் தேங்கி வருகிறது. விவசாய நிலத்திற்கு தண்ணீர் செல்லவில்லை. மேலும், குடியிருப்புகளுக்கு அருகில் தேங்குவதால் அந்த பகுதி மோசமான நிலையில் உள்ளது. தண்ணீர் தேங்காமல் செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சாலை சேதம்; விபத்துக்கு வாய்ப்பு: கிருஷ்ணராயபுரம் அடுத்த, சிந்தலவாடி நெடுஞ்சாலை மரம் அறுக்கும் பகுதியில் சிமென்ட் சாலை அமைக்கப்பட்டுள்ளது. இந்த சாலை வழியாக மக்கள் நடந்து செல்கின்றனர். தற்போது, சாலையின் ஒரு பகுதி சேதமடைந்துள்ளது. இரவு நேரத்தில் நடந்து செல்லும் மக்கள் கால்தவறி விழுகின்றனர். மேலும், வாகன ஓட்டிகள் தடுமாற்றமடைகின்றனர். இந்த சாலையை சரி செய்ய பஞ்சாயத்து நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுகுறித்து, பலமுறை புகார் கொடுத்தும் பலனில்லை.

பாலம் தடுப்பு சேதத்தால் அச்சம்: கிருஷ்ணராயபுரம் அடுத்த, பிள்ளபாளையத்தில் மாயனூர் காவிரி ஆற்றில் பிரிந்து செல்லும் கட்டளை மேட்டு வாய்க்கால் செல்கிறது. இந்த வாய்க்கால் நடுவே வாகனம் செல்லும் வகையில் நடைப்பாலம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த பாலம் வழியாக வாகனம் மற்றும் மக்கள் சென்று வருகின்றன. பாலத்தின் தடுப்புச்சுவர் சேதமடைந்து, கீழே தொங்குகிறது. இரவு நேரத்தில் மக்கள் அச்சத்துடன் கடந்து செல்கின்றனர். தடுப்புச்சுவரை புதிதாக கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X