பொது செய்தி

தமிழ்நாடு

நேர செலவு பொறுத்தே வெற்றி சதவீதம் கூடும்: கலெக்டர் பேச்சு

Added : நவ 29, 2019
Advertisement

கரூர்: ''நேரத்தை எவ்வாறு செலவு செய்கிறீர்கள் என்பதை பொறுத்தே, வெற்றியின் சதவீதம் கூடும்,'' என, கருத்தரங்கில் கலெக்டர் அன்பழகன் பேசினார்.
கரூர், தாந்தோன்றிமலை அரசு கலை மற்றும் அறிவியில் கல்லூரியில், மாவட்ட தொழில் மையம் சார்பில், நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கான விழிப்புணர்வு கருத்தரங்கு நடந்தது. இதில், கலெக்டர் அன்பழகன் பேசியதாவது: கடந்த நிமிடங்களை நினைத்து கவலை கொள்ளாமல், நிகழ் காலத்தில் தன்னம்பிக்கையுடனும் விடாமுயற்சியுடனும், குறிக்கோளை மட்டுமே வைத்து செயல்பட்டால், எதிர்காலம் நமக்கு வெற்றியை மட்டுமே பரிசளிக்கும் என்பதை அனைவரும் மனதில் கொள்ள வேண்டும். இன்றைய காலகட்டத்தில், அனைவருக்கும் கல்வி சமமாக வழங்கப்படுகிறது. நம் மீது நாம் முதலில் நம்பிக்கை வைத்து, நன்றாக படித்து நம்மை தகுதியுள்ளவராக மாற்றிக்கொள்ள வேண்டும். நீங்கள் உங்கள் நேரத்தை எவ்வாறு செலவு செய்கிறீர்கள் என்பதை பொறுத்தே, வெற்றியின் சதவீதம் கூடும். நீங்கள் கடந்து வந்த பாதையை நினைத்து, வருத்தப்படுவதால் எந்தவித பயனும் இல்லை. அதிலுள்ள பிழைகளை திருத்திக்கொண்டு நீங்கள் பயணம் செய்தால், அது உங்களை வெற்றிக்கு அழைத்து செல்லும். தமிழகத்தில் புதிதாக தொடங்கப்படும் மற்றும் விரிவாக்கம் மேற்கொள்ளும் சிறு உற்பத்தி சார்ந்த குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு, அரசால் மானியம் வழங்கப்பட்டு வருகிறது. படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான, வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின் கீழ், 8 ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற, 45 வயதுக்குட்பட்ட இளைஞர்களுக்கு, உற்பத்தி திட்டங்களுக்கு அதிகபட்சமாக, 10 லட்சம் ரூபாய், சேவை திட்டங்களுக்கு, 3 லட்சம் ரூபாய், வியாபார திட்டங்களுக்கு, 1 லட்சம் ரூபாய் மானியத்துடன் வங்கிக்கடன் வழங்கப்பட்டு வருகிறது. இவ்வாறு, அவர் பேசினார். மாவட்ட தொழில் மையம் பொதுமேலாளர் ரமேஷ், கரூர் மாவட்ட தொழில் வர்த்தக கூட்டமைப்பு தலைவர் ராஜூ, கரூர் மாவட்ட டெக்ஸ்டைல்ஸ் உற்பத்தி மற்றும் ஏற்றுமதியாளர்கள் சங்க செயலாளர் பிரித்வி, கரூர் நெசவு மற்றும் பனியன் தொழிற்சாலை உரிமையாளர்கள் சங்க தலைவர் தனபதி, கல்லூரி முதல்வர் கவுசல்யாதேவி உட்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X