பொது செய்தி

தமிழ்நாடு

மகளிர் சுயஉதவி குழுவினருக்கு ரூ.45 லட்சம் கடனுதவி வழங்கல்

Added : நவ 29, 2019
Advertisement

குளித்தலை: நெய்தலூர், ஐ.ஓ.பி., வங்கி சார்பில் நடந்த கிராம அளவிலான சிறப்பு விழிப்புணர்வு முகாமில், எட்டு மகளிர் குழுவினருக்கு, 45 லட்சம் ரூபாய் வங்கிக்கடன் உதவிகள் வழங்கப்பட்டன.
குளித்தலை அடுத்த, நெய்தலூரில் ஐ.ஓ.பி வங்கி மற்றும் நபார்டு வங்கி சார்பில், கிராம அளவிலான விழிப்புணர்வு முகாம் நடந்தது. நெய்தலூர் ஐ.ஓ.பி., வங்கி மேலாளர் முகேஷ் குமார் ரஞ்சன் தலைமை வகித்தார். வங்கி (விவசாயம்) மேலாளர் கார்த்திக் முன்னிலை வகித்தார். நபார்டு வங்கி பொது மேலாளர் பரமேஸ்குமார், எட்டு மகளிர் சுய உதவிக்குழுவினருக்கு, 45 லட்ச ரூபாய் கடனை பல்வேறு தொழில் முன்னேற்றத்திற்காக வழங்கி பேசியதாவது: மகளிர் குழுவினர் கூட்டாக இணைந்து, ஒற்றுமையுடன் செயல்பட்டு குழு பதிவேடுகளை நன்கு பராமரித்து, வங்கிகளில் சேமிப்பு கணக்கு துவக்கி நல்லமுறையில் நடத்த வேண்டும். குழுவின் மூலம் வங்கிகளில் தாங்கள் பெறும் கடன்களை, முறையாக பயன்படுத்தி வங்கிக்கு திரும்ப செலுத்தி வங்கியுடன் இணைந்து முன்னேற்றம் அடைய வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். நபார்டு திட்டம், ஐ.ஓ.பி., வங்கி கடன் திட்டம், விவசாய திட்டம், ஏ.டி.எம்., - ஆதார் முறை பயன்பாடுகள், மொபைல் வங்கி பரிவர்த்தனை முறை, டிஜிட்டல் பண பரிவர்த்தனை ஆகியவை மூலம், வங்கிக்கு கடன் தொகையை உரிய தவணைகளில் வட்டியுடன் திரும்ப செலுத்தும் முறைகள், நிதி மேலாண்மை, பாரத பிரதமரின் இன்சூரன்ஸ் திட்டங்கள் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது. நெய்தலூர் ஐ.ஓ.பி., மேலாளர் முகேஸ்குமார் ரஞ்சன் தலைமை வகித்து பேசினார். வங்கி வியாபார தொடர்பாளர்கள் சந்தோஷ்குமார், உதயா, இளங்கோவன், கனகவள்ளி, ஜோதிமணி உட்பட, பல்வேறு கிராமங்களிலிருந்து மகளிர் குழுவினர் கலந்துகொண்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X