பொது செய்தி

தமிழ்நாடு

ஜப்பானிய காடை வளர்ப்பு குறித்து பயிற்சி

Added : நவ 29, 2019
Advertisement

குளித்தலை: குளித்தலை அடுத்த, புழுதேரி இந்திய வேளாண் அறிவியல் மையத்தில், லாபகரமான அறிவியல் சார்ந்த முறையில், ஜப்பானிய காடை வளர்ப்பு முறை குறித்து, ஒரு நாள் சிறப்பு பயிற்சி முகாம் நடந்தது. முகாமில், அறிவியல் சார்ந்த முறையில் காடை வளர்ப்பு, மதிப்பூட்டப்பட்ட பொருட்கள் தயாரித்தல் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது. மைய கால்நடை மருத்துவர் அருண்,' சிறிய அளவில், 300, 400 எண்ணிக்கையுடைய ஜப்பானிய காடைகள் வளர்ப்பு பராமரித்தல், ஜப்பானிய காடை, முட்டை காடை, இறைச்சி காடை வளர்ப்பு, காடைகளுக்கான தீவனம், அடைகாப்பான் முறையில் காடை வளர்ப்பு, காடைகளை தாக்கும் நோய்கள் மற்றும் தீர்வுகள் குறித்து விளக்கம் அளித்தார். தொடர்ந்து மனையியல் துறை வல்லுனர் மாலதி, காடை முட்டை ஊறுகாய் மற்றும் மதிப்பூட்டப்பட்ட பொருட்கள் தயாரிப்பு பற்றி செயல்முறை விளக்கம் அளித்தார். பின்னர், காடை வளர்ப்பு மாதிரி மையத்திற்கு விவசாயிகள் அழைத்து செல்லப்பட்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X