சாலையில் வழிந்தோடும் நீரால் வாகன ஓட்டிகள் தவிப்பு

Updated : நவ 29, 2019 | Added : நவ 29, 2019
Advertisement

கரூர்: சாலையில் ராஜவாய்க்கால் தண்ணீர் செல்வதால், வாகன ஓட்டிகள் தவித்து வருகின்றனர். கரூர் மாவட்டத்தில், அமராவதி ஆறு மூலம் பாசனம் பெறும் பிரதான வாய்க்காலாக பள்ளபாளையம் ராஜவாய்க்கால் உள்ளது. அமராவதி ஆற்றின் அணைக்கட்டு தடுப்பணையில் இருந்து பிரியும், இந்த வாய்க்கால் மூலம், 20 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. கரூர் நகர் விரிவாக்கம் காரணமாக, வாய்க்கால் ஆக்கிரமிக்கப்பட்டதால் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படும்போது, வாய்க்கால் நிரம்பி வெளியேறும் நீர், சேலம் பழைய புறவழிச்சாலையில், வெங்கமேடு மேம்பாலம் பகுதியில் வெள்ளம் போல ஓடுகிறது. இதனால் இருசக்கர வாகன ஓட்டிகள், பொதுமக்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர்.
இது குறித்து, அப்பகுதி மக்கள் கூறியதாவது: அமராவதி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள அணைக்கட்டில் இருந்து, திருமுக் கூடலூர் வரை செல்லும் பள்ள பாளையம் ராஜவாய்க்கால், 47 கி.மீ. நீளம் கொண்ட பெரிய வாய்க்கால். தற்போது, ஆற்றில் தண்ணீர் வரத்து நின்று போனதால், வாய்க்காலில் நகர்ப் பகுதியில் இருந்து வெளியேறும் கழிவுகள் கலக்கின்றன. நகராட்சி சார்பிலும், வெங்க மேடு பகுதியில் ராஜவாய்க்காலில் நேரிடையாக கழிவுநீர் கலக்கும் வகையில், வாய்க்கால் வெட்டி இணைத்துள்ளனர். எனவே, பாசனத்திற்கு தண்ணீர் திறக்கும் போது, ராஜவாய்க்காலில் பெரும்பாலும் கழிவுநீர் கலந்து வருகிறது. தற்போது வாய்க்கால் தண்ணீர் திறக்கப்பட்டுள்ள நிலையில், தண்ணீர் சாலையில் வழிந்தோடுகிறது. வெங்கமேடு ரயில்வே மேம் பாலத்திற்கு கீழ் உள்ள சாலையில் கழிவுநீர் கலந்து தண்ணீர் நிற்பதால், வாகன ஓட்டிகள் திணறுகின்றனர். குறிப்பாக டூவிலர்களில் செல்பவர்கள் தடுமாறி விழும் நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளனர். எனவே, வாய்க்காலை தூர் வாரி, முறையாக தண்ணீர் செல்ல ஏற்பாடு செய்ய வேண்டும். இவ்வாறு, அவர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X