மக்கள் பயன்பாடு இன்றி வீணாகியுள்ள ஆசாத் பூங்கா

Added : நவ 29, 2019
Advertisement

கரூர்: கரூர் நகராட்சி அலுவலகம் எதிரில் ஆசாத் பூங்கா உள்ளது. தொழில் நகரமான, கரூரில் ஏராளமான தொழில் நிறுவனங்கள் இருந்தாலும், சிறுவர், சிறுமியர் பெற்றோருடன் வந்து பொழுது போக்கும் வகையில் பூங்காக்கள் இல்லாமல் இருந்தது. இதையடுத்து, சில ஆண்டுகளுக்கு முன்பு ஆசாத் சாலையில் பூங்கா அமைக்கப்பட்டு பயன்பாட்டில் இருந்து வந்தது. மாலை நேரங்களில், சிறுவர்கள் விளையாடி சென்றனர். தற்போது, விளையாட்டு உபகரணங்கள் பழுது ஏற்பட்டு, பறவைகளின் எச்சம், குப்பை கொட்டப்பட்டுள்ள இடமாக மாறிய காரணத்தினால் யாரும் பயன்படுத்த முடியாத நிலை நிலவி வருகிறது. பலமுறை பூங்கா வளாகம் சீரமைக்கப்பட்டாலும், பராமரிப்பு இல்லாமல் மீண்டும் மோசமான நிலைக்கே சென்றுள்ளது. எனவே, பூங்காவை சீரமைத்து அனைத்து தரப்பினரும் பயன்படுத்தும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X