விபத்து ஏற்படுத்தும் மரம்: நாமக்கல்-திருச்சி சாலை, ரயில்வே மேம்பாலம் அருகே, வங்கிக் கிளை உள்ளது. அதனருகே நேதாஜி நகர் செல்லும் சாலையில் உள்ள புளிய மரம், வாகனங்கள் திரும்புவதற்கு இடையூறாக உள்ளது. அதனால் விபத்து ஏற்படும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. எனவே, அந்த மரத்தை அகற்ற நெடுஞ்சாலைத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுகுறித்து, பலமுறை வேண்டுகோள் விடுத்தும் பலனில்லை.
- எம். சுமதி மதுரம், பொன்விழா நகர்.
ஆட்டோக்கள் நிறுத்துவதால் சிரமம்: குமாரபாளையம் பஸ் ஸ்டாண்டில், தினமும் அதிக எண்ணிக்கையில் பஸ்கள் வந்து பயணிகளை ஏற்றியும், இறக்கியும் செல்கின்றன. பஸ்கள் நிறுத்தப்படும் இடங்களில் மினி டெம்போக்கள் மற்றும் ஆட்டோக்கள் நிறுத்தி வைப்பதால் பஸ்கள் நிற்க இடமில்லாமல் தவிக்கும் நிலை தொடர்கதையாகி வருகிறது. இது போன்ற ஆட்டோக்களை பறிமுதல் செய்து, ஓட்டுனர்களின் உரிமத்தை ரத்து செய்ய வேண்டும்.
- டி.முத்துகிருஷ்ணன், குமாரபாளையம்.