பொது செய்தி

தமிழ்நாடு

தேசிய பள்ளி சிறார் நலத்திட்டத்தில் மாணவர்களுக்கு மருத்துவ முகாம்

Added : நவ 29, 2019
Advertisement

ராசிபுரம்: தேசிய பள்ளி சிறார் நலத்திட்டத்தில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு மருத்துவ முகாம் நடந்தது. நாடு முழுவதும் பள்ளி சிறார் நலத்திட்டத்தில், பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு முகாம் நடத்தப்படுகிறது. மருத்துவர்கள் நேரடியாக பள்ளிக்கு சென்று மாணவர்களை பரிசோதிக்கின்றனர். இதயம், தோல் நோய், தொழுநோய் அறிகுறிகள் உள்ளிட்ட, 10 வகையான நோய்களை முன்கூட்டியே கண்டறிந்து அவைகளுக்கு முறையாக சிகிச்சை அளிக்க இத்திட்டம் உதவுகிறது. அதுமட்டுமின்றி அன்னப்பிளவு, பிறவியிலேயே ஏற்படும் குறைபாடுகளை கண்டறிந்து அவர்களுக்கு முறையாக அறுவை சிகிச்சை செய்யவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதையொட்டி, வெண்ணந்தூர் ஒன்றியம், ஓ.சவுதாபுரம் ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில், அரசு பள்ளிகளில் சிறப்பு மருத்துவ முகாம் நடத்தப்படுகிறது. ஆர்.புதுப்பாளையம் பள்ளியில் இதற்கான முகாம் நடந்தது. உதவி தலைமை ஆசிரியர் விஜயகுமாரி தொடங்கி வைத்தார். டாக்டர் தர்மராஜ் மாணவர்களை பரிசோதனை செய்தார். தேவையான மாணவர்களுக்கு மருந்து, மாத்திரைகள் வழங்கப்பட்டன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X