பொது செய்தி

தமிழ்நாடு

அதிகாரிகள் கவனத்திற்கு - நாமக்கல்

Added : நவ 29, 2019
Advertisement

பாலத்தை புதுப்பிக்க மக்கள் கோரிக்கை: குமாரபாளையம் தட்டான்குட்டை ஊராட்சி, வீரப்பம்பாளையம் பகுதியில் சின்னாயக்காடு, நல்லாம்பாளையம், உப்புக்குளம் உள்ளிட்ட பல கிராமங்கள் உள்ளன. அப்பகுதி மக்கள் பயன்பெறும் வகையில், கிராமங்களை இணைக்கும் விதமாக கிழக்குக்கரை வாய்க்காலில் பாலம் கட்டப்பட்டது. தற்போது மிகவும் சேதமடைந்துள்ளது. நாளடைவில் மக்கள் பயன்பாட்டிற்கும், வாகன போக்குவரத்திற்கும் இயலாததாக மாறி விடும். பாலத்தை உடனே புதுப்பிக்க வேண்டும்.
குப்பை குவிப்பு; சுகாதார சீர்கேடு: வேலகவுண்டம்பட்டி பஸ் நிறுத்தம் அருகே, போலீஸ் ஸ்டேஷன், வர்த்தக நிறுவனங்கள், வழிபாட்டுத்தலம் உள்ளிட்டவை உள்ளன. வையப்பமலை செல்லும் சாலையில் துணை சுகாதார நிலையம் உள்ளது. அதன் முன் குப்பை குவிக்கப்பட்டு உள்ளது. அவற்றை பல நாட்களாக அகற்றப்படாததால், துர்நாற்றம் வீசுவதோடு, சுகாதார சீர்கேடும் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து, அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும், எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

பொது மயானத்தில் முட்புதர் ஆக்கிரமிப்பு: மல்லசமுத்திரம் பேரூராட்சி, பெரியகொல்லப்பட்டியில் உள்ள மயானத்தில் முட்புதர்கள் வளர்ந்துள்ளன. விஷ ஜந்துகளின் நடமாட்டம் அதிகரித்து, இறுதிச் சடங்குக்கு வருகின்றவர்கள் அச்சத்துடன் இருக்க வேண்டிய சூழல் நீடித்து வருகிறது. அதுமட்டுமின்றி, பள்ளம் தோண்ட முடியாமலும் தவித்து வருகின்றனர். எனவே, 'மயானத்தில் உள்ள முட்புதர்களை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சுகாதார வளாகம் பராமரிப்பு அவசியம்: மல்லசமுத்திரம் பேரூரட்சி, சின்னகொல்லப்பட்டி ஏரிஅருகே, 2015-16ம் ஆண்டில், பொது கழிப்பிடம் கட்டப்பட்டது. போதிய பராமரிப்பு இல்லாததால், பயன்படுத்த முடியாத சூழல் உள்ளது. திறந்தவெளியை பயன்படுத்த வேண்டிய அவலம் நீடிக்கிறது. அதுமட்டுமின்றி, கட்டடத்தின் அருகே உள்ள மின் கம்பத்தில் பல மாதங்களாக விளக்கு எரியாமல் உள்ளது. கழிப்பிடத்தை பராமரிக்க ஆட்களை நியமிக்கவும், மின் விளக்கை சரிசெய்யவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தண்ணீர் தொட்டியை அப்புறப்படுத்தணும்! வெண்ணந்தூர், ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி அருகே, பயன்பாட்டில் இல்லாத தண்ணீர் டேங்க் அமைந்து உள்ளது. இந்த கட்டடம் மிகவும் பாழடைந்த நிலையில் உள்ளதால், கனத்த மழை பெய்யும்போது சேதமடையும் ஆபத்து உள்ளது. அதுமட்டுமின்றி, இதன் மறைவிடத்தை மது அருந்துதல் உள்ளிட்ட சமூக விரோத செயல்களுக்கு பயன்படுத்திக்கொள்கின்றனர். எனவே, பயன்பாடில்லாத, ஆபத்தான இந்த தண்ணீர் டேங்கை இடித்து அப்புறப்படுத்த வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X