இரவில் தூய்மைப் பணி: நகராட்சி நிர்வாகம் அசத்தல்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

இரவில் தூய்மைப் பணி: நகராட்சி நிர்வாகம் அசத்தல்

Added : நவ 29, 2019

குமாரபாளையம்: குமாரபாளையத்தில், இரவு நேரத்தில் சாலை தூய்மைப்பணி நடந்தது.
குமாரபாளையத்தில், 33 வார்டுகள் உள்ளன. தினமும் காலை, 6:00 முதல், 11:00 மணி வரை, மதியம், 2:00 முதல், 5:00 மணி வரை துப்புரவு பணியாளர்கள் அனைத்து பகுதிகளிலும் தூய்மைப்பணி மேற்கொள்வர். பிரதான சாலைகளில் உள்ள பல்வேறு வியாபார நிறுவனத்தார், தங்கள் கடை முன் குப்பையை போட்டு செல்கின்றனர். இதனால் பெரும் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது. அவற்றை இரவு நேரங்களில் சுத்தம் செய்ய மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியதன் பேரில், இரவு நேரங்களிலும் நகராட்சி துப்புரவு பணியாளர்கள், தூய்மைப் பணி மேற்கொண்டு வருகின்றனர்.

இதுகுறித்து, சுகாதார அலுவலர் ராமமூர்த்தி கூறியதாவது: முக்கிய சாலைகளில் உள்ள கடையினர், தங்கள் பணி முடிந்து செல்கையில், கடைகள் முன் குப்பையை போட்டு செல்கின்றனர். இதனால், சுகாதார சீர்கேடு ஏற்படுவதுடன் வாகன ஓட்டிகள் அவதிப்பட நேரிடுகிறது. இரவு முழுவதும் அவை காற்றில் பறந்து, மழையில் நனைந்து சாலை முழுதும் பரவி விடுகின்றன. மறுநாள் காலை சுத்தம் செய்ய சிரமப்படவேண்டியுள்ளது. கலெக்டரின் உத்தரவின் பேரில் இரவிலும் தூய்மைப்பணி மேற்கொண்டு வருகிறோம். இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X