பொது செய்தி

தமிழ்நாடு

தொண்டு நிறுவனங்களுக்கு மானியம்: விண்ணப்பிக்க நாளை கடைசி நாள்

Added : நவ 29, 2019
Advertisement

நாமக்கல்: 'நாமக்கல் மாவட்டத்தில் இயங்கும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், மாநில அரசின் மானியம் பெற, நாளைக்குள் கருத்துரு அனுப்ப வேண்டும்' என, கலெக்டர் மெகராஜ் தெரிவித்துள்ளார்.
அவரது அறிக்கை: தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மாநில அரசின் மானியம் பெறுவதற்கான தகுதிகளாக, மாநில அரசு நிதி உதவியுடன் செயல்படும், ஆதரவற்ற முதியோர் இல்லங்களாக இருக்க வேண்டும். 40 பேர் வரை தங்கியிருக்க வேண்டும். மாநில அரசு நிதி உதவியுடன் செயல்படும், ஆதரவற்ற முதியோர் மற்றும் குழந்தைகளுக்கான ஒருங்கிணைந்த வளாகங்களைப் பொறுத்தமட்டில், மாநில அரசு, 25 சதவீதம், தனியார் தொண்டு நிறுவனம், 75 சதவீதம் என்ற வகையில் இருக்க வேண்டும். 25 முதியோர் மற்றும் 25 குழந்தைகள் தங்கியிருக்க வேண்டும். மத்திய அரசு நிதியுதவியுடன் மூத்த குடிமக்களுக்கான திட்டத்தின் கீழ் இயங்கும் முதியோர் இல்லங்களைப் பொறுத்தவரை, 90 சதவீதம் மத்திய அரசு நிதி ஒதுக்கீடு, 10 சதவீதம் தனியார் தொண்டு நிறுவன ஒதுக்கீடு, குறைந்தபட்சம், 25 முதியோர் இருக்க வேண்டும். தேவையான ஆவணங்களுடன், இதற்கான கருத்துருவை, கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட சமூகநல அலுவலகத்துக்கு, நாளைக்குள் அனுப்ப வேண்டும். விபரங்களுக்கு, 04286 -280230 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு, அதில் தெரிவித்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X