பொது செய்தி

தமிழ்நாடு

ஆஞ்சநேயர் கோவிலில் டிச.,25ல் ஜெயந்தி விழா

Added : நவ 29, 2019
Advertisement

நாமக்கல்: நாமக்கல் ஆஞ்சநேயர் கோவிலில், டிச., 25ல் ஜெயந்தி விழா கொண்டாடப்பட இருப்பதாக செயல் அலுவலர் கூறினார். நாமக்கல் ஆஞ்சநேயர் கோவிலில், ஒரே கல்லினால் ஆன, 18 அடி உயர ஆஞ்சநேயர் அருள்பாலித்து வருகிறார். மார்கழி மாதம் மூல நட்சத்திரத்தில் ஆஞ்சநேயர் ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டு வருகிறது. ஆனால் இந்த ஆண்டில் சூரிய கிரகணம், டிச., 26ல் வருகிறது. அன்று, அமாவாசை திதியில் ஆஞ்சநேயர் பிறந்த மூல நட்சத்திரமும் வருவதாக கூறப்படுகிறது. பஞ்சாங்க கணக்குப்படி, டிச., 26 தான் ஆஞ்சநேயர் ஜெயந்தி விழா கொண்டாட வேண்டிய நாள் என்றும், சூரிய கிரகணத்தால் ஒருநாள் முன்பாக ஜெயந்தி விழா கொண்டாடுவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், ஆஞ்சநேயர் கோவிலில் காலண்டரில் அச்சிடப்பட்டு உள்ளபடி, டிச., 25ம் தேதி அனுமன் ஜெயந்தியை கொண்டாட முடிவு செய்துள்ளனர்.
இதுகுறித்து, செயல் அலுவலர் ரமேஷ் கூறியதாவது: நாமக்கல் ஆஞ்சநேயர் கோவிலில், அமாவாசை நாளான, டிச., 25ல் ஆஞ்சநேயர் ஜெயந்தி விழாவை கொண்டாட அர்ச்சகர்கள் ஒப்புதல் அளித்து கடிதம் கொடுத்துள்ளனர். எனவே, அன்று ஜெயந்தி விழாவை, விமரிசையாக கொண்டாட ஏற்பாடுகளை செய்து வருகிறோம். இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X