இந்த செய்தியை கேட்க
புதுடில்லி : டில்லி ஜனாதிபதி மாளிகையில் பொருத்துவதற்காக வைக்கப்பட்டிருந்த குடிநீர் குழாய்களை திருடியவர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.

இது தொடர்பாக டில்லி போலீசார் கூறுகையில், ஜோர் பாக் பகுதியில் இருந்து ராஷ்டிரபதி பவனுக்கு தண்ணீர் குழாய் பதிக்கப்பட்டு வருகிறது. இவற்றில் பல குழாய்கள் கேட் 23 மற்றும் 24 க்கு அருகே பொருத்தப்பட்டுள்ளன. ஒப்பந்த தொழிலாளர்கள் இந்த குழாய்களை பதிப்பதற்காக அங்கே வைத்திருந்தனர். அப்போது தான் இந்த திருட்டு சம்பவம் நடந்துள்ளது என்றனர்.

இரண்டு குழாய்களை காணவில்லை என ஒப்பந்தக்காரர்கள் சாணக்கியபுரி போலீசில் ஸ்டேஷனில் புகார் அளித்தார். இதனையடுத்து அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமிராக்களை ஆய்வு செய்த போது, மர்ம நபர்கள் சிலர் காரில் அப்பகுதியில் நடமாடிக் கொண்டிருந்தனர். அதன் பிறகு அங்கு குடிநீர் குழாய்கள் மாயமாகி இருப்பது தெரிய வந்துள்ளது. காரில் வந்தவர்கள் இந்த திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டிருக்கலாம் என கூறப்படுகிறது.
மர்ம நபர்கள் வந்த Swift Dzire காரின் எண்ணை வைத்து, அதன் உரிமையாளர் அஜய் என்பவரை போலீசார் கைது செய்து விசாரித்துள்ளனர். அவர் அளித்த தகவலின் அடிப்படையில் பீகாரை சேர்ந்த மிதிலேஷ், உபர் கார் டிரைவர் ராகேஷ் திவாரி, உ.பி.,யின் அமேதியை சேர்ந்த குட்டு கான் ஆகியோரை போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களிடம் இருந்து திருடு போன குடிநீர் குழாய்கள் மீட்கப்பட்டுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE