சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மாடியிலிருந்து குதித்து பெண் விபரீத முடிவு

Added : நவ 29, 2019
Advertisement

நாமக்கல்: சேலம் மாவட்டம், தலைவாசலை சேர்ந்தவர் மணிகண்டன், 30; ஜோதிடர். இவருடைய மனைவி, நாமக்கல் அன்னை சத்யா நகரை சேர்ந்த சாவித்திரி, 26. கடந்த, மூன்று ஆண்டுகளுக்கு முன் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். 2 வயதில் மகன் உள்ளான். இந்நிலையில், இருவருக்கும் அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. கடந்த, இரு மாதங்களுக்கு முன், தாய் வீட்டுக்கு சாவித்திரி வந்து விட்டார். ஆனால், மணிகண்டன், சாவித்திரியை மீண்டும் குடும்பம் நடத்த அழைக்கவில்லை என கூறப்படுகிறது. இதனால், அவர் மனவேதனையுடன் இருந்துள்ளார். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு, 7:00 மணியளவில் வீட்டின், மூன்றாவது மாடியிலிருந்து குதித்து, சாவித்திரி தற்கொலை செய்து கொண்டார். நாமக்கல் போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X