குமாரபாளையம்: குமாரபாளையம் அருகே, வீரப்பம்பாளையம் வாய்க்கால் பகுதியில் நல்லாம்பாளையம், உப்புக்குளம், பழனிகவுண்டம்பாளையம், குள்ள நாயக்கன்பாளையம், சின்னாயக்காட்டூர் ஆகிய ஊர்களுக்கு செல்லும் ஐந்து சாலை சந்திப்பு உள்ளது. குடியிருப்புகள் அதிகம் உள்ளதால் இந்த சந்திப்பில், வேலைக்கு செல்வோர், பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு செல்லும் மாணவ, மாணவியர் உள்ளிட்ட பொதுமக்கள் பஸ்சுக்கு காத்திருப்பது வழக்கம். வெட்ட வெளியாக இருப்பதால் கடும் வெயிலில் நிற்க வேண்டிய நிலை உள்ளது. இங்கு நிழற்கூடம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.