பொது செய்தி

தமிழ்நாடு

ரூ.2.50 கோடி மதிப்பில் புதிய பூங்காக்கள் திறப்பு

Added : நவ 29, 2019
Advertisement

ஈரோடு: ஈரோடு சம்பத் நகரில், 40 லட்சம் ரூபாய், எம்.ஜி.ஆர்., நகரில், 50 லட்சம், அருள்வேலவன் நகரில், இரு இடங்களில் தலா, 50 லட்சம், டெலிபோன் நகரில், 56 லட்சம் ரூபாய் என, 2.46 கோடி ரூபாய் மதிப்பில் பூங்காக்கள் அமைக்கப்பட்டன. இதன் திறப்பு விழா, மாநகராட்சி ஆணையர் இளங்கோவன் தலைமையில் நடந்தது. செயற்பொறியாளர் விஜயகுமார், உதவி ஆணையர் அசோக்குமார் முன்னிலை வகித்தனர். எம்.எல்.ஏ.,க்கள் ராமலிங்கம், தென்னரசு ஆகியோர், பூங்காக்களை திறந்து வைத்தனர் காவிரி சாலையில், மாநகராட்சி மேல்நிலைப்பள்ளியில், 35 லட்சம் ரூபாய் மதிப்பில், கூடுதல் வகுப்பறைகள் கட்டும் பணி, கருங்கல்பாளையம் விநாயகர் கோவில் வீதியில், 21 லட்சம் ரூபாயில் அங்கன்வாடி மையம் அமைக்கும் பணிக்கு அடிக்கல் நாட்டினர். பகுதி செயலாளர்கள் ஜெகதீசன், ஜெயராஜ், முருகுசேகர் உட்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X