பொது செய்தி

தமிழ்நாடு

ரூ.1,000 கோடியில் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க அறிக்கை தயார்: கருப்பணன்

Added : நவ 29, 2019
Advertisement

சத்தியமங்கலம்: ''ஈரோட்டில், 1,000 கோடி ரூபாயில், கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க, அறிக்கை தயார் செய்து அனுப்பிஉள்ளோம்,'' என, சுற்றுச்சூழல்துறை அமைச்சர் கருப்பணன் கூறினார்.
கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கள்ளிப்பட்டியில், முதல்வரின், சிறப்பு குறைதீர்க்கும் திட்டத்தில் பெறப்பட்ட மனுக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது. அமைச்சர் கருப்பணன், 802 பயனாளிகளுக்கு, 92 லட்சம் ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

பின்னர் நிருபர்களிடம் அவர் கூறியதாவது: பவானி மற்றும் காவிரி ஆறுகளில் கழிவுகளை கலக்க விடாமல் தடுத்து, அந்த நீரை பவானி மற்றும் ஈரோடு பகுதிகளில், 1,000 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சுத்திகரிப்பு நிலையங்கள் அமைத்து அதில் கழிவுநீர் சுத்திகரிக்கப்படும். அந்த திட்டத்திற்கான திட்ட அறிக்கை தயார் செய்து, மத்திய சுற்றுச்சூழல் துறைக்கு அனுப்பியுள்ளோம். இத்திட்டத்திற்கு மத்திய அரசு, 50 சதவீதமும், மாநில அரசு, 25 சதவீத மானியமும், மீதம் உள்ள, 25 சதவீதத்தை தொழில் முதலீட்டாளர்கள் வழங்க உள்ளனர். முதல்வரின் ஒப்புதலுடன் விரைவில் சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார். 'விவசாயிகள் கடன் தள்ளுபடி செய்யப்படுமா' என கேட்டபோது, ''உள்ளாட்சி தேர்தல் இருப்பதால் செய்ய முடியாது. இருந்தாலும் முதல்வர் விரைவில் விவசாய கடன் தள்ளுபடி குறித்து அறிவிப்பார்,'' என, அமைச்சர் கருப்பணன் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X