தமிழ்நாடு

சத்தியில் எலி வேட்டை! நெல் பயிரை பாதுகாக்க விவசாயிகள் காவல்

Added : நவ 29, 2019
Share
Advertisement
சத்தியமங்கலம்: சத்தியமங்கலம் அருகே, நெல் பயிர்களை பாதுகாக்க, நூற்றுக்கணக்கான எலிகளை, விவசாயிகள் கொன்று குவித்து வருகின்றனர்.ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் அடுத்த உக்கரம், மில்மேடு, கேத்தம்பாளையம் ஆகிய பகுதிகளில், 50 ஆயிரம் ஏக்கரில் விவசாய நிலங்கள் உள்ளன. இதில், 10 ஆயிரம் ஏக்கரில் கீழ்பவானி பாசனம் மூலம், நெல் பயிரிடப்பட்டுள்ளது. கேத்தம்பாளையம் கிராமத்தை சேர்ந்த மணி

சத்தியமங்கலம்: சத்தியமங்கலம் அருகே, நெல் பயிர்களை பாதுகாக்க, நூற்றுக்கணக்கான எலிகளை, விவசாயிகள் கொன்று குவித்து வருகின்றனர்.
ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் அடுத்த உக்கரம், மில்மேடு, கேத்தம்பாளையம் ஆகிய பகுதிகளில், 50 ஆயிரம் ஏக்கரில் விவசாய நிலங்கள் உள்ளன. இதில், 10 ஆயிரம் ஏக்கரில் கீழ்பவானி பாசனம் மூலம், நெல் பயிரிடப்பட்டுள்ளது. கேத்தம்பாளையம் கிராமத்தை சேர்ந்த மணி என்பவரின், தோட்டத்தில் பயிரிடப்பட்டிருந்த நெல் பயிர்களை, இரவு நேரங்களில் நூற்றுக்கணக்கான எலிகள் சேதப்படுத்தியுள்ளன. மேலும், அருகில் உள்ள வயல்வெளிகளிலும் புகுந்து, 500 ஏக்கர் பரப்பளவில் நெல் பயிர்களை எலிகள் சேதப்படுத்தி வந்துள்ளன. இதையடுத்து, பயிர்களை பாதுகாக்க இரவு, பகலாக விவசாயிகள் காவல் பணியில் ஈடுபட்டு, எலிகளை பிடிப்பதற்காக பல்வேறு இடங்களில் பொறிகள் அமைக்கப்பட்டு, எலிகளை கொன்று குவித்து வருகின்றனர்.

இது குறித்து விவசாயிகள் கூறியதாவது: எலிகளிடமிருந்து நெல் பயிர்களை பாதுகாக்க, வேளாண்மைத்துறை சார்பில் நடவடிக்கை எடுக்க வேண்டும். எலிகளால் தினமும் விவசாயிகளுக்கு பெரும் நஷ்டம் ஏற்படுகிறது. இதற்கு அரசு உரிய நஷ்டஈடு வழங்க வேண்டும். கடந்த மாதம், கீழ்பவானி வாய்க்கால் கரை உடைந்து அதன் தண்ணீர், விவசாய தோட்டங்களுக்குள் புகுந்ததால், ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலம் தண்ணீரில் மூழ்கியது. இதனால் இப்பகுதி விவசாயிகள் கடும் நஷ்டமடைந்தனர். தற்போது, எலிகளின் தொல்லை அதிகரித்து நெல் பயிர்கள் வீணாகி வருகின்றன. 24 மணி நேரமும் வயலில் காவல் இருந்து, எலிகளை கொன்று வருகிறோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X