சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ஆசிரியர் வீட்டின் பூட்டை உடைத்து நகை திருட்டு

Added : நவ 29, 2019
Advertisement

புன்செய்புளியம்பட்டி: புன்செய்புளியம்பட்டி, சேரன் இணைத்தெருவை சேர்ந்தவர் மயில்சாமி, 50. இவர், பனையம்பள்ளி அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியராக உள்ளார். இவரது மனைவி சித்ரகனி, ராஜன்நகர் அடுத்துள்ள கஸ்தூரிபா நகர், அரசுப்பள்ளி ஆசிரியை. இவர்களது மகன் தரணீஷ், கோவை மாவட்டம், சிறுமுகை அருகேயுள்ள பள்ளியின் விடுதியில் தங்கி படித்து வருகிறார். கடந்த, 22ல், மயில்சாமி, மனைவியுடன் சிறுமுகை சென்றார். இதை நோட்டமிட்ட திருடர்கள், அன்றிரவு வீட்டின் முன்பக்க கதவின் பூட்டை உடைத்து, உள்ளே சென்று பீரோவில் இருந்த, மூன்றரை பவுன் தங்க நகையை திருடி சென்றனர். மறுநாள் காலை, பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை அக்கம்பக்கத்தினர், மயில்சாமிக்கு தகவல் தெரிவித்தனர். புன்செய்புளியம்பட்டி போலீசார் வழக்கு பதிந்து, திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டவர்களை தேடி வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X