சம்பவம் செய்தி

தமிழ்நாடு

அரியர் தேர்வு எழுத வந்த மாணவன் நீரில் மூழ்கி பலி

Added : நவ 29, 2019
Advertisement

சென்னிமலை: அரியர் தேர்வு எழுத வந்த மாணவன், வாய்க்கால் நீரில் மூழ்கி பலியானார். திருப்பூர் மாவட்டம், காங்கேயம் அடுத்துள்ள களிமேட்டை சேர்ந்த லட்சுமணன் மகன் தீபன்ராஜ், 21. இவர், கடந்த மே மாதம் சென்னிமலை அருகே தனியார் பொறியியல் கல்லூரியில், பி.இ., மெக்கானிக்கல் முடித்துள்ளார். நேற்று இவர், அரியர் தேர்வு எழுத கல்லூரி வந்துள்ளார். அங்கு அவருடன் படித்த நண்பர்கள் இளவேந்தன், ராஜா, சிவானந்தம் ஆகியோரை சந்தித்துள்ளார். இவர்கள் நான்கு பேரும் நன்றாக படிக்கவில்லை; தேர்வு எழுதினால் பெயில் ஆகிவிடுவோம் அதனால் தேர்வு எழுத வேண்டாம் என முடிவு செய்து, சென்னிமலையில் ஒரு ஓட்டலில் மதியம் சாப்பிட்டனர். பின்னர், அருகேயுள்ள எல்.பி.பி., வாய்க்கால் செல்லும் பகுதி இரட்டை பாலம் அருகே குளித்துள்ளனர். நான்கு பேருக்கும் நீச்சல் தெரியாது என்பதால், வாய்க்கால் ஓரம் நின்று குளித்துள்ளனர். இதில், தீபன்ராஜ் கால் தவறி நீரில் மூழ்கி இறந்துள்ளார். சடலத்தை மீட்கும் பணியில், தீயணைப்பு வீரர்கள் இரவு வரை தேடி கண்டுபிடிக்க முடியவில்லை. இன்று காலை அவரை தேடும் பணி நடக்கும்.சென்னிமலை போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X