பொது செய்தி

தமிழ்நாடு

'கேந்திரிய வித்யாலயா பள்ளி துவக்க விரைவில் நடவடிக்கை'

Added : நவ 29, 2019
Advertisement

கிருஷ்ணகிரி: ''கிருஷ்ணகிரி மாவட்டத்தில், விரைவில் கேந்திரிய வித்யாலயா பள்ளி துவங்க நடவடிக்கை எடுக்கப்படும்,'' என, உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் பேசினார்.
முதலமைச்சரின் சிறப்பு குறைதீர்க்கும் திட்டத்தில், பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா, கிருஷ்ணகிரியில் நடந்தது. கலெக்டர் பிரபாகர் தலைமை வகித்தார். உயர் கல்வித்துறை அமைச்சர் அன்பழகன், 1,320 பயனாளிகளுக்கு, 1 கோடியே, 91 லட்ச ரூபாய் மதிப்பிலான நலத்திட்டங்களை வழங்கி பேசியதாவது: கிருஷ்ணகிரி மாவட்டத்தில், கல்விக்கு முக்கியத்துவம் கொடுத்து, அரசு பொறியியல் கல்லூரி மற்றும் கலைக்கல்லூரிகள் துவங்கி செயல்பட்டு வருகின்றன. தமிழக முதல்வர், கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு மருத்துவ கல்லூரியை பெற்று தந்துள்ளார். நடப்பாண்டில் இந்த மாவட்டத்தில், 525 ஏரிகளை தூர்வார, ஒன்பது கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு பணிகள் நடந்துள்ளன. முதல்வரின் சிறப்பு குறைதீர்க்கும் முகாமில் மாவட்டத்தில் பெறப்பட்ட, 30 ஆயிரத்து, 273 மனுக்களில், 13 ஆயிரத்து, 925 மனுக்கள் ஏற்கப்பட்டு, அவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகிறது. கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு, மத்திய அரசின் கேந்திரிய வித்யாலயா பள்ளி கொண்டு வர, கோரிக்கைகள் வந்துள்ளன. விரைவில் இந்த மாவட்டத்தில், கேந்திரிய வித்யாலயா பள்ளி துவங்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அமைச்சர் பேசினார். விழாவில், கூட்டுறவு பால்வள தலைவர் குப்புசாமி மற்றும் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X