பொது செய்தி

தமிழ்நாடு

அரசுப்பள்ளி மாணவர்கள் ஒரு நாள் சூழல் சுற்றுலா

Added : நவ 29, 2019
Advertisement

கரூர்: கரூர், கோட்டைமேடு அரசு உயர்நிலைப்பள்ளி தேசிய பசுமை படை சார்பில், மாணவர்கள் ஒரு நாள் சூழல் சுற்றுலா சென்றனர்.
மாவட்ட சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளர் ஜெரால்டு தலைமையில், 25 மாணவ, மாணவியர் ஆசிரியைகள், பயிற்சி ஆசிரியைகள் கலந்து கொண்டனர். முதலில் மாயனூர் முடக்கு சாலையில் உள்ள, தர்சன் ஆர்கானிக் அடர் வனத்தை பார்வையிட்டு, 120 வகையான மர வகைகள், பராமரிக்கும் முறைகள், குறைந்தளவு சொட்டு நீர் முறைகள் பற்றி விளக்கம் அளித்தனர். 50 வகைகளுக்கு மேல் மரவகைகள் கண்டறிந்த மாணவர்களுக்கு, பிரண்டை செடி பரிசளிக்கப்பட்டது. பிறகு மாயனூர் அம்மா பூங்கா, அக்குவாரியம் ஆகியவற்றை பார்வையிட்டனர். பின் காவிரி கிளை வாய்க்கால்கள் பிறப்பிடம், காடுகளின் முக்கியத்துவம், அதன் அவசியம் குறித்து கூறப்பட்டது. பள்ளி சூழல் ஒருங்கிணைப்பு ஆசிரியை மேகலா உட்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X