பொது செய்தி

தமிழ்நாடு

150 டன் இயற்கை உரம் இலவசமாக வழங்கல்

Added : நவ 29, 2019
Advertisement

சேலம்: சேலம் மாநகராட்சியிலுள்ள, 13 நுண்ணுயிர் உரம் தயாரிப்பு மையங்களில், திடக்கழிவிலிருந்து உரம் தயாரிக்கப்படுகிறது. காக்காயன்காடு மையத்தை, மாநகராட்சி கமிஷனர் சதீஷ், நேற்று ஆய்வு செய்த பின் கூறியதாவது: மாநகரில், 400 டன் திடக்கழிவு சேகரமாகிறது. அதில், மட்கும் கழிவிலிருந்து, உரம் தயாரிக்க, 25.70 கோடி ரூபாய் மதிப்பில், தூய்மை இந்தியா திட்டத்தில், 14 மையங்கள், 'ஸ்மார்ட் சிட்டி' திட்டத்தில், 16 மையங்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதில், 13 நுண்ணுயிர் உர தயாரிப்பு மையங்கள் செயல்பாட்டுக்கு வந்துள்ளன. இதன்மூலம், 120 டன் திடக்கழிவு, உரம் தயாரிக்க பயன்படுத்தப்படுகிறது. அதில், 60 டன் கழிவு உரமாக மாற்றப்படுகிறது. இம்மையங்கள் மூலம், இதுவரை, 150 டன் இயற்கை உரம் தயாரித்து, மக்கள், விவசாயிகளுக்கு இலவசமாக வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X