பொது செய்தி

தமிழ்நாடு

போலீஸ் துறையில் இனி எல்லாம் தமிழ் மயம்

Added : நவ 29, 2019
Advertisement

சேலம்: போலீஸ் துறையில், சுற்றறிக்கை, உத்தரவு, வாகனங்கள் ஆகியவற்றில், தமிழில் எழுத உத்தரவிட்டு, நேற்று முதல், தமிழகம் முழுவதும் அமல்படுத்தப்பட்டது.
'தமிழக போலீஸ் வாகனங்கள் மட்டுமின்றி, சுற்றறிக்கை, உத்தரவு உள்ளிட்ட அனைத்தும் தமிழில் இடம்பெற வேண்டும்' என, டி.ஜி.பி., திரிபாதி உத்தரவிட்டார். அதன்படி, சுற்றறிக்கைகள், உத்தரவுகள் அனைத்தும் உடனடியாக தமிழில் மாற்றம் செய்யப்பட்டன. அதைத் தொடர்ந்து, வாகனங்களில், 'போலீஸ்' என, ஆங்கிலத்தில் எழுதப்பட்டிருந்ததை, நேற்று முதல், 'காவல்' என, தமிழில் மாற்றி எழுதி வருகின்றனர். சேலம் மாவட்டத்தில் போலீசார் பயன்படுத்தும் இரு, நான்கு சக்கர வாகனங்களை, ஆயுதப்படை மைதானத்தில், எஸ்.பி., தீபா கானிகேர், கூடுதல் எஸ்.பி., அன்பு, ஆயுதப்படை டி.எஸ்.பி., ஜான்சன் ஆகியோர், நேற்று ஆய்வு செய்தனர். அப்போது, போலீஸ் வாகனங்களிலிருந்த ஆங்கில எழுத்துகளை அழித்துவிட்டு, தமிழில் எழுதப்பட்டன. அத்துடன், தமிழில் எழுதப்படாத சில வாகனங்களையும், உடனடியாக மாற்ற தீபா கானிகேர் உத்தரவிட்டார். அதேபோல், தமிழக போலீசின், நான்கு மண்டலம், 12 சரகம், மாவட்ட எஸ்.பி., மாநகர போலீஸ் கமிஷனர், சரக டி.ஐ.ஜி., மண்டல ஐ.ஜி.,க்கள் என, உயரதிகாரி களின் வாகனங்கள், அவர்களது கட்டுப்பாட்டிலுள்ள வாகனங்கள், சிறப்பு பிரிவுகளின் வாகனங்கள் உள்ளிட்டவையிலும், நேற்று முதல், 'காவல்' என எழுதப்பட்டன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X