சம்பவம் செய்தி

தமிழ்நாடு

காஸ் கசிந்து தீ விபத்து: உயிர் தப்பிய தம்பதி

Added : நவ 29, 2019
Advertisement

கெங்கவல்லி: சமையல் செய்துகொண்டிருந்தபோது, காஸ் கசிந்து தீ விபத்து ஏற்பட்டதில், அதிர்ஷ்டவசமாக தம்பதியர் உயிர் தப்பினர். கெங்கவல்லி அருகே, வீரகனூர், அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த, கூலித்தொழிலாளி மணி, 42. இவரது மனைவி மீனாட்சி, 36. இவர், நேற்று முன்தினம் இரவு, 10:00 மணிக்கு, காஸ் அடுப்பில் சமையல் செய்து கொண்டிருந்தார். அப்போது, சிலிண்டரிலிருந்து செல்லும் டியூப்பில் காஸ் கசிந்து நெடி வீசியுள்ளது. சில நிமிடத்தில், தீ விபத்து ஏற்பட்டது. தம்பதியர், உடனே கூச்சலிட, அப்பகுதியினர் ஓடிவந்து, சிலிண்டரின் டியூப்பை பிடுங்கி, ஈரச்சாக்கு போட்டு அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். தொடர்ந்து, கெங்கவல்லி தீயணைப்பு வீரர்கள், தீ பரவாமல் தடுக்க நடவடிக்கை எடுத்தனர். விபத்தில், தம்பதியர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X