சம்பவம் செய்தி

தமிழ்நாடு

விபத்தில் படுகாயமடைந்த போலீஸ்காரர் சாவு

Added : நவ 29, 2019
Share
Advertisement
ஓமலூர்: புல்லட்டில் சென்ற போலீஸ்காரர், அரசு டவுன் பஸ் மோதி படுகாயமடைந்த நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்தார்.சேலம் மாவட்டம், காடையாம்பட்டி, தீவட்டிப்பட்டி போலீஸ் ஸ்டேஷனில், போலீஸ்காரராக பணிபுரிந்தவர் சிங்கார வேலன், 26. நேற்று முன்தினம் இரவு, சேத்துப்பாறையிலிருந்து, புல்லட்டில், தீவட்டிப்பட்டி நோக்கி சென்றுகொண்டிருந்தார். அவருடன், ப்ரண்ட்ஸ் ஆப்

ஓமலூர்: புல்லட்டில் சென்ற போலீஸ்காரர், அரசு டவுன் பஸ் மோதி படுகாயமடைந்த நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்தார்.
சேலம் மாவட்டம், காடையாம்பட்டி, தீவட்டிப்பட்டி போலீஸ் ஸ்டேஷனில், போலீஸ்காரராக பணிபுரிந்தவர் சிங்கார வேலன், 26. நேற்று முன்தினம் இரவு, சேத்துப்பாறையிலிருந்து, புல்லட்டில், தீவட்டிப்பட்டி நோக்கி சென்றுகொண்டிருந்தார். அவருடன், ப்ரண்ட்ஸ் ஆப் போலீஸ் மணிமாறன், 25, சென்றார். தீவட்டிப்பட்டி ஜங்ஷனில் திரும்பியபோது, ஓமலூரிலிருந்து ஜாலிகொட்டாய் செல்லும் அரசு டவுன் பஸ் எதிரே வந்து, புல்லட் மீது மோதியது. அதில், தலைக்கவசம் அணிந்திருந்த சிங்காரவேலன் படுகாயமடைந்தார். மணிமாறன் லேசான காயமடைந்தார். தீவட்டிப்பட்டி போலீசார், இருவரையும் மீட்டு, மாமாங்கத்திலுள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு, நள்ளிரவு, 12:30 மணிக்கு, சிங்காரவேலன் உயிரிழந்தார். தர்மபுரி மாவட்டம், பொம்மிடியைச் சேர்ந்த அவர், 2013ல் பணியில் சேர்ந்த நிலையில், ஏழு மாதத்துக்கு முன் தான் திருமணமானது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X